சனி பகவானுக்கு பிடித்த ராசிகள் இவைதான்! இதில் உங்கள் ராசியும் உள்ளதா?

வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அனைத்து கிரகங்களிலும், சனிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. சனி பகவான் ஒருவருக்கு அவரவர் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் சனி நல்ல விதமாக அமையவில்லை எனில் அவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிட

By ·

வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அனைத்து கிரகங்களிலும், சனிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. சனி பகவான் ஒருவருக்கு அவரவர் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் சனி நல்ல விதமாக அமையவில்லை எனில் அவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் ஒருவரது ஜாதகத்தில் சனி கிரகம் சுபமாக இருந்தால் அவருக்கு எந்த தொந்தரவும் இருக்காது. மார்ச் 29 ஆம் தேதி, சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பெயர்ச்சி இந்த ஆண்டின் முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சனி பகவான் பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் அருள் புரியும் கிரகம். எனினும் சில ராசிகள் இவருக்கு மிகவும் பிடித்த ராசிகளாக இருக்கின்றன. இவர்களை சனி பகவான் உடனிருந்து காக்கிறார். சனி பகவானின் மனம் கவர்ந்த அந்த 5 ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களை சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். அவர் எப்போதும் இந்த ராசிக்காரர்களுக்கு சுப விளைவுகளையே அளிக்கிறார். வாழ்நாள் முழுவதும் அவர் ரிஷப ராசிக்காரர்களின் உடனிருந்து சோதனைகளிலிருந்து காக்கிறார். சனி அதிபதியாக திகழ்வதால் இவர்களுக்கு எந்த ஒரு வேலையும் செய்ய தயங்க மாட்டார்கள். ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் வந்தாலும், சில ராசிக்காரர்கள் சனியின் அருள் பெற்று, வாழ்வில் முன்னேற்றப் பாதையில் பயனிப்பார்கள். வாழ்க்கையில் நிறைய அமைதி மகிழ்ச்சி மற்றும், நல்ல நிதி நிலை போன்றவற்றுடன் வாழ்வார்கள்.

துலாம்

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். துலாம் ராசி சனிக்கு மிகவும் பிடித்தமான ராசி. சனி உச்சத்தில் இருக்கும் போது இந்த ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக, இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பகவானிடமிருந்து எப்போதும் நல்ல பலன்கள் கிடைக்கும். சனி பகவான் இந்த ராசிக்காரர்களுக்கு எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்வார். சனி பகவானின் குளிர்ச்சியான பார்வை இந்த ராசியின் மீது எப்போதும் இருக்கும். பொதுவாக ஒரு வேலை நாள் கிடைக்கக்கூடிய நற்பலன்கள், இவர்களுக்கு சனி பகவானால் அதிகமாகவே கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசி சனி பகவானின் சிறப்பு அருளை பெறும் ராசிகளில் ஒன்று. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் எப்போதும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில்லை. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அஷ்டம சனியின் பாதிப்புகள் பெரிதாக ஏற்படுவதில்லை. சனீஸ்வரரின் கால பிரவேசத்தின் போது கூட சனி பகவான் அவர்களுக்கு அதிகமாக கஷ்டம் தருவதில்லை. ஏழரை சனி நடந்தாலும் தனுசு ராசியினருக்கு, சனி பகவானின் செல்வாக்கின் காரணமாக மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வம் அதிகரிக்க கூடிய காலமாகவே இருக்கும்.

மகரம்

மகரம் சனியின் விருப்பமான ராசிகளில் ஒன்று. ஆகையால் இந்த ராசியில் பிறந்தவர்கள் சனி பெயர்ச்சி, ஏழரை சனி காலங்களில் அதிக துன்பங்களை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படுவதில்லை. மகர ராசிக்காரர்கள் தோல்வியை எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர் அவர்களின் வாழ்க்கையில் எல்லாவிதமான மகிழ்ச்சியையும் தருகிறார். மகர ராசிக்காரர்களுக்கு சனியால் அதிக சிரமம் இருக்காது. மகர ராசியினர் சனி பகவனை வழிபட்டால் விரைவில் புண்ணியமும், நற்பலனும் கிடைக்க பெறுவார்கள். சனி தோஷத்திலிருந்து விடுபடுவார்கள்.

கும்பம்

இந்த ராசியில் பிறந்தவர்கள் மீது சனிக்கு சிறப்பு பிரியம் உண்டு. ஏனெனில் கும்பம் சனியின் ராசி. எனவே, கும்ப ராசிக்காரர்கள் எப்போதும் சனியின் அருளைப் பெறுவார்கள். இதன் விளைவாக, இந்த ராசியில் பிறந்தவர்கள் எந்த நிதிப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது. இதன் காரணமாக கும்ப ராசியினர் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்களாக விளங்குகின்றனர். மேலும் சனி பகவானின் அருளால் திடீர் தன லாபத்தையும் பெற வாய்ப்புள்ளது.

இதனையும் படியுங்கள் : கஷ்டம் தீர சனி பகவானுக்கு செய்யும் பரிகாரம்

Recipes AMP · Quick view
View full