நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றும் முருகன் மந்திரம்!!

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, ‘தமிழ்க் கடவுள்' என்று தமிழ்ச் சமூகம் உரிமையோடு போற்றிக் கொண்டாடி வழிபடுகிறது. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கி, பக்தர்களின் குறைகளைப் போக்க, கூப்

By ·

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, ‘தமிழ்க் கடவுள்’ என்று தமிழ்ச் சமூகம் உரிமையோடு போற்றிக் கொண்டாடி வழிபடுகிறது. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கி, பக்தர்களின் குறைகளைப் போக்க, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து அருள்புரிபவர் முருகன். முருகனை வேண்டிக் கொள்பவர்களுக்கு பிரச்சனைகள், துன்பங்கள் நீங்குவதால் முருகப் பெருமான் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒரு சிலருக்கு அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறாமல் போயிருக்கும். அப்படிப்பட்டவர்களின் வேண்டுதல்கள் நிறைவேற எப்படி வழிபட வேண்டும் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்ப்போம்.

வேண்டுதல்கள் நிறைவேற முருகன் வழிபாடு

“சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்பார்கள். முருகப் பெருமானிடம் வைத்த தங்களின் கோரிக்கைகள் நிறைவேறிய பக்தர்கள் பால் குடம் எடுத்தல், மொட்டை அடித்தல், காவடி ஏந்துதல், பாதயாத்திரை வருதல், அலகு குத்தி வருதல் உள்ளிட்ட பல வகைகளில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுவதை இன்றும் நம்மால் காண முடிகிறது. ஆனாலும் சிலருடைய வாழ்வில் ஏதாவது ஒரு துன்பம், மன வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் முருகப்பெருமானின் மந்திரத்தை கூறி வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.

மந்திரம்

” ஓம் ஸ்ரூம் ஸ்கந்தாய நமஹ “

மந்திரத்தை உச்சரிக்கும் முறை

இந்த வழிபாடு தொடங்குவதற்கு ஒரு நோட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் வேண்டுதல் எதுவோ அதை எழுதிக் கொள்ளுங்கள் அதாவது நான் வீடு கட்ட வேண்டும், நல்ல நிலமைக்கு வர வேண்டும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என நேர்மையாக வேண்ட வேண்டும். அதன்பிறகு இந்த பதிவில் கூறியுள்ள முருகனின் மந்திரத்தை ஆறு முறை உச்சரித்துக் கொண்டே எழுத வேண்டும். மந்திரத்தை எழுதி விட்டு பூஜையறையில் வைத்து விட வேண்டும். பின் அடுத்த நாள் அந்த நோட்டில் மறுபடியும் உங்கள் வேண்டுதலை எழுதி மந்திரத்தை எழுத வேண்டும். இந்த வழிபாட்டை தொடர்ந்து 21 நாட்கள் செய்ய வேண்டும். இந்த மந்திர வழிபாட்டை நாம் செவ்வாய்கிழமை தொடங்கினால் நல்லது. முடியாதவர்கள் கிருத்திகை நட்சத்திரத்திலோ அல்லது சஷ்டி திதியிலோ செய்யலாம். இந்த வழிபாட்டை நாம் செய்யும் போது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். பெண்கள் தீட்டு காலத்தில் இந்த வழிபாட்டை செய்யாமல் இருப்பது நல்லது. இந்த வழிபாடு செய்து உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதும் மந்திரம் எழுதிய நோட்டை அருகில் இருக்கும் முருகன் கோவிலில் வைத்து விடுங்கள். இந்த வழிபாட்டை முழுமனதுடன் செய்தால் அந்த முருகனே ஏதோ ஒரு வடிவில் வந்து நமக்கு அருள் செய்வதாக ஐதீகம். அதனால் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்.

இதனையும் படியுங்கள் : வெற்றிகளை குவிக்க செய்யும் முருகன் மந்திரம் ‌

Recipes AMP · Quick view
View full