கவலைகள் தீர முருக பெருமானுக்கு செய்ய வேண்டிய பரிகாரம்!
நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளும் இனிமேல் வரப்போகின்ற பிரச்சனைகளும் முருகர் என்ற பெயர் சொன்னாலே தீர்ந்துவிடும் என்று அருணகிரிநாதர் கூறியிருக்கிறார். அவருடைய பெயரை சொன்னால் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் நீங்கி நன்மைகள் அதிக அளவில் தேடி வரும். முருகப்பெருமானை மனதார வேண்டிக் கொண
நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளும் இனிமேல் வரப்போகின்ற பிரச்சனைகளும் முருகர் என்ற பெயர் சொன்னாலே தீர்ந்துவிடும் என்று அருணகிரிநாதர் கூறியிருக்கிறார். அவருடைய பெயரை சொன்னால் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் நீங்கி நன்மைகள் அதிக அளவில் தேடி வரும். முருகப்பெருமானை மனதார வேண்டிக் கொண்டு வீட்டில் துன்பங்கள் துயரங்கள் நீங்க வேண்டும் என்று வழிபாடு செய்யலாம்.
கஷ்டங்களும் கவலைகளும்
ஒரு சிலர் வாழ்க்கையில் இன்பத்தை பார்க்காமல் கஷ்டங்களையும் கவலைகளையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் போக்குவதற்கு முருகப்பெருமானை நம்பி முழு மனதோடு முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம். தீராத கஷ்டங்களையும் தீர்த்து வைப்பவர் முருகப்பெருமான் எனவே அவரை நம்பி எளிமையான இந்த வழிபாட்டை செய்யுங்கள்
வழிபாடு செய்ய வேண்டிய முறை
செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள் எனவே அந்த நாளன்று பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்து விநாயகப் பெருமானையும் குலதெய்வத்தையும் வழிபட்டு விட்டு குலதெய்வத்திற்கு என காணிக்கை முடிந்து வைக்க வேண்டும் பிறகு இந்த பரிகாரத்தை செய்யலாம். பிறகு முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக அகல் விளக்கு ஏற்றி வைத்து 108 முறை முருகப்பெருமானுக்கு இந்த மந்திரத்தை கூற வேண்டும்.
மந்திரம் கூற வேண்டிய முறை
முருகப்பெருமானின் படத்திற்கு முன்பு ஒரு தட்டு வைத்து அந்த தட்டில் விபூதியால் “ஓம் நமோ குமாராய நம” என்று எழுதிவிட்டு 108 முறை உச்சரிக்க வேண்டும். பொதுவாக நாம் ஒரு மந்திரத்தை உச்சரிக்கும் போது அவசரமாக சொல்லக்கூடாது நிதானமாக இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமை கூறி வந்தால் நிகழும் மாற்றங்களை பார்க்க முடியும். செவ்வாய்க்கிழமை தவிர சஷ்டி கிருத்திகை விசாகம் போன்ற நாட்களிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பிரம்ம முகூர்த்த வேலையில் செய்தால் இதனுடைய பலன் இரண்டு மடங்காக கிடைக்கும். இதற்கான பலன்கள் சீக்கிரமாக கிடைக்காவிட்டாலும் கொஞ்சம் தாமதமாகவும் கிடைக்கும் எனவே முழுமனதோடு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : கடன் பிரச்சினைகள் தீர செய்ய வேண்டிய பரிகாரம்!