வெற்றி கிடைக்க நிலை வாசல் வழிபாடு!
குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி தேவியார் குடி கொண்டிருக்கும் இடம் தான் நிலை வாசல். தினமும் நம் வீட்டில் உள்ள நிலை வாசலுக்கு பூஜைகள் செய்தால் அதற்கான பலன்கள் நமக்கு நிறையவே கிடைக்கும். தினமும் நிலை வாசலுக்கு பூஜை செய்து வந்தால் நமக்கு அளவில்லாத வெற்றிகளும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி தேவியார் குடி கொண்டிருக்கும் இடம் தான் நிலை வாசல். தினமும் நம் வீட்டில் உள்ள நிலை வாசலுக்கு பூஜைகள் செய்தால் அதற்கான பலன்கள் நமக்கு நிறையவே கிடைக்கும். தினமும் நிலை வாசலுக்கு பூஜை செய்து வந்தால் நமக்கு அளவில்லாத வெற்றிகளும் மகிழ்ச்சியும் கிடைக்கும். வாழ்க்கையில் அளவில்லாத வெற்றிகளை பெறுவதற்கு நிலை வாசலுக்கு பூஜை செய்ய வேண்டிய சில வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மாட விளக்கு
நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த வீடுகளில் நிலை வாசலில் மாடம் இருக்கும். அந்த மாடத்தில் தினமும் காலை நேரத்தில் இருந்து விளக்கு ஏற்றி வைத்தால் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து போகும். மாதவிலக்குகள் இரண்டும் சூரியன் மற்றும் சந்திரனை குறிக்கும். விளக்கு ஏற்றி வைக்கும் போது கணவன் மனைவிக்குள் சண்டைகள் வராது என்பது ஐதீகம். நான் இப்பொழுது எல்லாம் யாரும் வீட்டில் பாடம் வைத்து கட்டுவதுமில்லை மாடத்தில் விளக்கு வைப்பதும் இல்லை.
நிலைவாசல் விளக்கு
பழைய காலத்து வீடுகளில் வாழ்பவர்களுக்கு மாட விளக்கு வைப்பது மிகவும் சுலபம். அப்படி இல்லாதவர்கள் மரத்தால் மாதங்கள் கிடைத்தால் வாங்கி வீட்டில் முன் ஆணி அடிக்க மாட்டி வைத்து அதில் அகல் விளக்கு குபேர விளக்கு போன்றவற்றை ஏற்றலாம். வெள்ளிக்கிழமையிலும், செவ்வாய்க்கிழமையிலும் குபேர விளக்கு மற்றும் அகல் விளக்கு ஏற்றுவது மிகவும் விசேஷமானது. அப்படி வைக்க முடியாதவர்கள் நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து நிலை வாசலில் இருபுறமும் வாசனை மிகுந்த வெட்டிவேர் மாலையை தொங்கவிட்டு விளக்கு ஏற்றி வைக்கலாம்.
வெட்டிவேர் மாலை
நிலை வாசலில் வெட்டிவேர் மாலை இருந்தால் வீட்டிற்கு நிறைய வெற்றிகள் வரும். இதை வீட்டில் அழகுக்காக மட்டும் மாட்டி வைக்காமல் மகாலட்சுமி தேவியாருக்கு பிடித்த ஒரு பொருள் என்பதால் ஆன்மீக நோக்கத்தோடு பக்தியோடு வெட்டிவேரை மாட்டி வைக்கலாம். மேலும் நெல்மணிகளையும் நெல்மணி தோரணங்களையும் நிலை வாசலில் மேல் புறத்தில் மாட்டி வைப்பதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகி வறுமை என்பதே இருக்காது.
பச்சரிசி கோலம்
மேலும் நிலை வாசலில் பச்சரிசி கோலம் போடும்போது வீட்டில் உள்ளவர்கள் இந்த தோஷங்களை இது நீக்கும். மேலும் காவி பயன்படுத்தி நிலை வாசலில் கோலம் போடும்போது வீடு அழகாகவும் தெய்வீக அமைப்போடும் இருக்கும். மேலும் நிலை வாசலில் நாம் மாட்டி வைத்துள்ள வெட்டிவேர் தூசி அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டின் முதல் பார்வையான நிலை வாசலை அழகாக வைத்திருந்தால் தான் வீட்டிற்கு வரும்போது வீடு அழகாகும் மகிழ்ச்சியாகவும் தோன்றும்.
இதனையும் படியுங்கள் : மகாலட்சுமி வீட்டில் நிலைத்து நிற்க நிலைவாசலில் செய்யக்கூடாத தவறுகள்!