நவராத்திரி முடிவதற்குள் இந்த பொருளை நிலைவாசலில் வைத்தால் போதும் கடனெல்லாம் தீர்ந்து செல்வம் சேரும்!
சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்தக் கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். சில பேருக்
சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்தக் கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். சில பேருக்கெல்லாம் நிறையவே வருமானம் வரும். ஆனால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாது. லட்ச லட்சமாக சம்பாதித்தும் கடன்காரர்களாக வாழ்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய அந்த நிலைமையை மாற்றுவதற்கு முன்னோர்கள் எளிமையான பல ஆன்மீகப் பரிகாரங்களை கூறியுள்ளனர்.
நாம் என்னதான் அந்த கடனை அடைக்க பாடுபட்டு கொண்டு இருந்தாலும் நம்மளால் அது முடிவதில்லை அதற்கு தான் நம் முன்னோர்கள் பழங்காலத்தில் வீட்டு வாசப்படியில் ஒரு பரிகாரத்தை செய்வார்கள். அது என்ன பரிகாரம் என்பதனை பற்றியும் கடனை எப்படி அடைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.
மகாளய பட்ச அமாவாசையை தொடர்ந்து வருகிற இந்த நவராத்திரி தினங்கள் மிகவும் விசேசமானவை. இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவிகளை முறையாக வணங்கி வந்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். கொலு வைத்தவர்களோ அல்லது வைக்காதவர்களோ இந்த நவராத்திரி தினங்களில் அவர்கள் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடும் பொழுது நல்ல மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும். தீய சக்திகளும் அண்டாது.
தீபம் ஏற்றும் முறை
இந்த தீபத்தை நவராத்திரி அன்று பூஜையறையில் வைத்து ஏற்றினால் முப்பெருந்தேவிகளின் ஆசியைப் பெறலாம். ஒரு தட்டில் அரிசி அல்லது துவரம்பருப்பை வைத்து அதன்மேல் அகல் விளக்கு ஒன்றை வைத்து நெய் ஊற்றி பஞ்சுதிரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். இப்படி விளக்கு ஏற்றுவதன் மூலம் வீட்டில் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
வீட்டு நிலைவாசலில் கட்ட வேண்டிய பொருள்
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நவதானியங்களை வாங்கிக் கொள்ளுங்கள். பின் இதனை ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இதனை பூஜை அறையில் வைத்து உங்களுக்கு இருக்கும் கண் திருஷ்டி, பணகஷ்டம் எல்லாம் நீங்கி நல்வாழ்வை வாழ வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து இந்த முடிச்சை உங்கள் வீட்டின் நிலை வாசலில் கட்டிக் கொள்ளுங்கள்.
இந்த முடிச்சை உங்கள் வீட்டில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் மாற்றுங்கள். நீங்கள் மாற்றும் பொழுது அதில் இருக்கும் நவதானியங்களை எடுத்து காக்கை, குருவிகளுக்கு உணவாக வைத்து விடுங்கள். இப்படி நீங்கள் செய்யும் பொழுது உங்கள் வீட்டில் நவ தானியங்களுக்கு என்றுமே பஞ்சம் வராது. கடன் தொல்லைகள் எல்லாம் நீங்க செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : கட்டு கட்டாக பணம் சேரும் நவராத்திரி முடிவதற்குள் இந்த ஒரு பொருளை மட்டும் பீரோவி ல் வைத்து விடுங்கள்!