தீராத கடன் பிரச்சனைகளையும் தீர்க்கும் ஒரு ரூபாய் பரிகாரம்!!

சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே கடன் வாங்குவது சகஜம். அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்து வாழ்க்கையை செவ்வனே நடத்த வேண்டும் என்பதே பெரிய

By ·

சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே கடன் வாங்குவது சகஜம். அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்து வாழ்க்கையை செவ்வனே நடத்த வேண்டும் என்பதே பெரியோர்களின் கட்டளை. பசியோடு கூட உறங்கலாம், கடனோடு உறங்காதே என்பது ஆன்மிகம் காட்டும் அறிவுரை. பொதுவாக நம் வீட்டில் எவ்வளவு தான் பணம் தந்தாலும் அதற்கு செலவுகளும் வந்து கொண்டே தான் இருக்கும். பணத்தை சேமிக்க நாம் எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும் சில சமயங்களையும் நம்மால் பணம் சேர்க்கவே முடியாது. அந்த மாதிரியான சூழ்நிலைகளில் நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த சில எளிமையான பரிகாரங்களை செய்வதன் மூலம் நம் வீட்டில் கடன் பிரச்சினைகளும் செலவுகளும் படிப்படியாக குறைய தொடங்கும். அது என்ன பரிகாரம் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.‌ 

கடன் தீர ஏழுமலையான் வழிபாடு 

பூலோகத்தில் சீனிவாசராக அவதரித்த வெங்கடேச பெருமாள் மகாலட்சுமியின் அவதாரமான பத்மாவதி தாயாரை மணப்பதற்காக பெரிய தொகையை குபேரனிடம் இருந்து கடனாக பெற்றார். குபேரனிடம் வாங்கிய கடனுக்கு பெருமாள் இன்று வரை வட்டி மட்டும் தான் கட்டிக் கொண்டிருக்கிறார். தான் பட்ட கடனை பக்தர்கள் காணிக்கையாக கலியுகத்தில் செலுத்தி அடைப்பார்கள் என்று பெருமாள் சொன்னதாக சில கதைகளும் குபேரனிடம் வாங்கிய கடனை பெருமாள் எப்போதோ அடைத்து விட்டார் என்றும் கதைகள் சொல்லப்படுகின்றன. அந்த வகையில் பணக்கார கடவுளான இவரின் மனதில் மகாலட்சுமி நிரந்தமாக வாசம் செய்வதால், பெருமாளின் மனம் கவரும் பக்தர்களுக்கு பெருமாளின் அருள் மட்டுமின்றி, மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும். இதனால் பெருமாளை வழிபட்டால் பொருளாதார நிலையில் ஏற்றம் வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் தான் திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும், திருமலை மலை ஏறி சென்றால் வாழ்வில் ஏற்றம் வரும் என சொல்லுவது உண்டு. ஆனால் அனைவராலும் திருப்பதி சென்று விட முடியாது அல்லவா? அப்படிப்பட்டவர்கள் திருப்பதி ஏழுமலையானை நினைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரம் செய்வதற்கு சனிக்கிழமை எழுந்ததும் குளித்து விட்டு ஒரு வெள்ளை துணியை எடுத்து அதனை மஞ்சளில் நனைத்து காய வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இந்த துணியில் 7 ஒரு ருபாய் நாணயம், முழு‌ கொட்டை பாக்கு, நுனி உடையாத விரலி மஞ்சள் வைத்து ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளவும். இந்த மூட்டையை பூஜையறையில் பெருமாளின் முன்பு வைத்து நாம் பூஜை செய்யும் போதெல்லாம் என்னுடைய கடன் பிரச்சினை அனைத்தும் முற்றிலும் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு அதற்கும் ஆராதனை காட்டவும். உங்களுடைய கடன் பிரச்சினைகள் தீர்ந்தவுடன் திருப்பதிக்கு சென்று திருப்பதி ஏழுமலையானின் உண்டியலில் சேர்த்து விட வேண்டும். உண்டியலில் போடும் பொழுது இந்த மூட்டைக்குள் இருக்கும் கொட்டைப்பாக்கை எடுத்து விட்டு போட வேண்டும். கோவிலுக்கு வெளியே வந்த பிறகு கொட்டைப்பாக்கை கடித்து துப்பி விட வேண்டும். இந்த பரிகாரத்தை புரட்டாசி மாத சனிக்கிழமையில் செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் உங்கள் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ பெருமாள் அருள் புரிவார். 

இதனையும் படியுங்கள் : கடன் சுமை நீங்க செய்ய வேண்டிய வழிபாடு!!

Recipes AMP · Quick view
View full