மாலை நேரம் டீ, காபியுடன் சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்காய் பக்கோடா இப்படி செஞ்சி பாருங்க!

இந்தியக் குடும்பங்களின் பாரம்பரியங்களில் தவிர்க்க முடியாத ஒன்று இந்த பக்கோடா. பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உரு

By Prem Kumar · 12/11/2023

இந்தியக் குடும்பங்களின் பாரம்பரியங்களில் தவிர்க்க முடியாத ஒன்று இந்த பக்கோடா. பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது பலாக்காய் பக்கோடா. பலா பிஞ்சு மற்றும் இளம் காய் சிறந்த காய்கறி உணவாக பயன்படக் கூடியது. சுவையானது. அதில் பல அரிய சத்துக்கள் நிறைந்துள்ளது.

இலங்கையில் பலாக்காய் உணவுகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அரிசி உணவுக்கு இணையான அளவு மாவு சத்து இதில் உள்ளதால் பலா மரத்தை ‘அரிசி மரம்’ என்றும் அழைக்கின்றனர். பலாக்காயில் வைட்டமின் ஏ,பி,சி மற்றும் இரும்புசத்து, பொட்டாசியம், கால்சியம், புரதம் போன்ற சத்துகளும் உயர்தரமான மாவுச் சத்து மற்றும் நார்ச் சத்தும் உள்ளது. இது விரைவாக மற்றும் சுலபமாக செய்யக் கூடியது. மழைக்காலத்தில் சூடான மிருதுவான பக்கோடா என்றால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது. ஒரு சில பொருள்களை வைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்துவிடக்கூடிய பக்கோடாவால் குடும்பத்தினரையும் உறவினர்களையும் மகிழ்ச்சியடைய செய்ய முடியும். பக்கோடாவை கடையில் வாங்குவதற்கு பதிலாக ஆரோக்கியமான முறையில், வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான பலாக்காய் பக்கோடா வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full