பணம் பல வழிகளில் உங்களுக்கு வந்து கொண்டே இருக்க வேண்டுமா! இந்த ஒரே ஒரு தீபம் போதும்!

தற்போதைய நாட்களில் பணத்தின் மதிப்பு என்னவென்று சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும் அந்த அளவிற்கு பணம் என்பது இந்த உலகில் முக்கியமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. நாமும் அந்த பணத்தை சம்பாதிப்பதற்காக எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் பணம் நம் கையில் தங்குவதில்லை நாம் சம்பாதித்த பணம் எ

By Prem Kumar · 15/4/2024

தற்போதைய நாட்களில் பணத்தின் மதிப்பு என்னவென்று சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும் அந்த அளவிற்கு பணம் என்பது இந்த உலகில் முக்கியமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. நாமும் அந்த பணத்தை சம்பாதிப்பதற்காக எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் பணம் நம் கையில் தங்குவதில்லை நாம் சம்பாதித்த பணம் எங்கு போகின்றது என்று நமக்கே தெரிவதில்லை அந்த அளவுக்கு பொருள்களின் விலையும் உயர்ந்து கொண்டே போகிறது தவிர நம்முடைய வருமானம் உயர்வதில்லை. அதனால் இன்று நாம் நமக்கு தேவையான பணம் நமக்கு கிடைக்க, பணவரவு அதிகரிக்க செவ்வாய்க்கிழமை அன்று முருக பெருமாளுக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் நம் வீட்டில் பணப்புழக்கம் அதிகமாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனர். இதை பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

பழனி மலை முருகன்

நமது வீட்டில் நம் கையிலும் பணம் தங்க வேண்டும் செல்வம் பெருக வேண்டும் என்ற ஆன்மீக ரீதியாக செல்லும் போது நாம் முதலில் வழிபட வேண்டிய கடவுள்கள் என்று பார்த்தால் அது மகாலட்சுமி தாயார் தான் அவரைத் தொடர்ந்து திருப்பதி வெங்கடாஜலபதி நமக்கு செல்வத்தை வழங்குபவர். இவர்கள் இரண்டு பேரையும் தொடர்ந்து நாம் வீட்டிற்கு பணம் வர வேண்டும் என்பதற்காக நாம் வணங்க வேண்டிய மற்றொரு முக்கியமான கடவுள் என்றால் அது நம் பழனி மலையில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் தான். அதனால் தான் எப்போதும் பழனி மலையில் இருக்கும் முருகப்பெருமானை ராஜா அலங்காரத்தில் இருக்கும்போது தரிசித்து வந்தால் உங்கள் அதிர்ஷ்டங்கள் பெருகும் என்று ஐதீகம் நமக்கு சொல்கின்றது. அதனால் இன்று நமது முருகப்பெருமான் வழிபடையும் அந்த ராஜ அலங்காரத்தில் இருக்கும் படத்தை வைத்து தான் செய்யப் போகின்றோம்

தேவையானவை

அதனால் ராஜா அலங்காரத்தில் இருக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு நமக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை இந்த நாளில் தான் நாம் முருகப்பெருமானை வழிபட தொடங்க வேண்டும். மேலும் நமக்கு இந்த பூஜையை செய்வதற்கு ஆறு வெற்றிலைகள் தேவைப்படும் அதனுடன் ஆறு அகல் விளக்கு, சிவப்பு திரி, சுத்தமான பசு நெய் மற்றும் முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக வைக்க பஞ்சாமிர்தம் வீட்டிலேயே தயார் செய்து கொள்ள வேண்டும். அப்படி முருகப்பெருமானுக்கு நாம் செய்யும் இந்த பூஜையை செவ்வாய்க்கிழமை நாள் என்று எப்பொழுது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

முருகப்பெருமான் பூஜை

இந்த வழிபாடை செய்வதற்கு முதலில் முருகப்பெருமாள் ராஜ அலங்காரத்துடன் இருக்கும் திருவுருவப்படத்தை பூஜை அறையில் வைத்து அதற்கு சந்தன குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். பின்பு செவ்வரளி பூவை கொண்டு மாலை தயார் செய்து முருகப்பெருமானுக்கு சூட்டிவிடுங்கள். பின்பு நாம் வைத்திருக்கும் ஆறு வெற்றிலையும் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக வைத்து அதற்கு மேல் ஆறு அகல் விளக்கையும் வைத்து அகல்விளத்திற்கு பசு நெய் ஊற்றி பின் நாம் வைத்திருக்கும் சிவப்பு திரி போட்டு தீபமேற்றி பின்பு நெய்வேத்தியமாக பஞ்சாமிர்தத்தை படைக்க வேண்டும்.

ஆறு வாரம்

முருகப்பெருமானுக்கு விளக்கு ஏற்றிய பின்பு முடிந்தால் முருகப்பெருமானுக்கு முன் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படியுங்கள் படிக்க முடியாதவர்கள் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்ற பாடல்களை கேட்டு முருகப்பெருமானே வழிபாடு செய்யலாம். இப்படி இந்த செவ்வாய் கிழமை ராஜ அலங்காரத்துடன் இருக்கும் முருகப்பெருமான் வழிபாட்டை நீங்கள் தொடர்ந்து ஆறு வாரங்கள் செய்து வந்தால் உங்களுக்கு இருக்க கூடிய அத்தனை பணக்கஷ்டங்களையும் நீக்கி பணவரவை அதிகரிக்க வைத்து விடுவார். ஆறு வாரங்கள் இப்படி வெற்றிலை மீது தீபம் வைத்து ஏற்றிவிட்டு அதன் பிறகு எப்போதும் போல் சாதாரணமாக நாம் தீபமேற்றி வழிபட்டு வரலாம். நம்பிக்ககையுன் செய்யுங்கள் நல்ல பலனை கிடைக்கும்.

Recipes AMP · Quick view
View full