தண்ணீர் குடத்தை வீட்டில் இங்கு மட்டும் வையுங்கள்! பணம், பொருள் வீடு தேடி வந்து கொண்டே இருக்கும்!
நமக்கு நமது வீட்டில் உள்ளவர்களுக்கும் அடிக்கடி தொடர்ந்து ஒரே மாதிரியான பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும் போது அது நமது வீட்டில் இருக்கும் ஏதாவது குறையை உணர்த்துவதாக தான் இருக்கும் என்பதை முதலில் நீங்கள் உணர வேண்டும். அதாவது உதாரணமாக நாம் வீட்டில் வைத்து இருக்கும் சில பொருட்களால்
நமக்கு நமது வீட்டில் உள்ளவர்களுக்கும் அடிக்கடி தொடர்ந்து ஒரே மாதிரியான பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும் போது அது நமது வீட்டில் இருக்கும் ஏதாவது குறையை உணர்த்துவதாக தான் இருக்கும் என்பதை முதலில் நீங்கள் உணர வேண்டும். அதாவது உதாரணமாக நாம் வீட்டில் வைத்து இருக்கும் சில பொருட்களால் கூட நமக்கு தொடர்ந்து பிரச்சினைகளாகவும் பண கஷ்டங்களும் வந்து கொண்டிருக்கலாம். நாம் வைத்திருக்கு ஒரு சில பொருட்களில் இருக்கும் நேர்மறை சக்திகள் அல்லது எதிர்மறை சக்திகள் தான் நமது வாழ்க்கை தீர்மானிக்கின்றனர். அப்படி எதிர்மறை சக்திகளை வைத்திருக்கும் பொருள்களின் தன்மையை உணர்ந்து அதற்கேற்றார் போல் நம் செயல்படும் போது நம்மிடம் இல்லாத பணம் கூட நம்மை தேடி வந்து சேரும். இதை பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.
ஆயுட் காலம் நீடிக்க
நம் வீட்டில் என்னதான் தனித்தனியே எல்லாருக்கும் அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தாலும் நாம் அனைவரும் வீட்டில் கண்டிப்பாக ஒரு இடத்தில் அதிக நேரம் அமர்ந்து செலவிடுவதை வழக்கமாக வைத்திருப்போம். அது போன்ற இடங்களில் வெள்ளி அல்லது பித்தளை பட்டயத்தினால் செய்யப்பட்ட பிரமிடுகளை வைத்து இருந்தால் அதிலிருந்து வெளிவரும் நேர்மறை சக்தியின் காரணமாக நமது வீட்டில் உள்ளவர்களின் ஆயுள் காலம் நீட்டிக்கப்படும்.
பணம், பொருள் சேர
உங்கள் வீட்டில் அதிகமாக பணக்கஷ்டம் வந்து கொண்டே இருக்கிறது உங்கள் வீட்டில் பணம், பொருள் தேவை இன்னும் நிறைய இருக்கிறது என இது போன்ற பிரச்சினைகள் வரும்போதும் இல்லை உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் நிறைய வருகிறது என்றாலும் இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து வருவதை உணர்ந்து கொண்டு உங்கள் வீட்டில் வடக்கு திசையில் தண்ணீர் குடம் வைக்க வேண்டும். அப்படி வடக்கு திசையில் தண்ணீர் குடத்தை வைக்கா விட்டாலும் பரவாயில்லை. களிமண்ணால் செய்யப்பட்ட மண்பானை ஆவது வைக்க வேண்டும் அப்படி வைக்கும் மண்பானை எப்போதும் காலியாக இல்லாமல் தண்ணீர் குறைய குறைய ஊற்றி கொண்டே இருந்தால் போதும். உங்கள் வீட்டிற்கு தேவையான பணம் பொருள் சேர்ந்து கொண்டே இருக்கும்.
மீன் வளர்ப்பு
அதே போல் நம் வீட்டில் அனைவரும் அழகுக்காக மீன்களை வளர்ப்போம் ஆனால் அப்படி நாம் அழகுக்காக வளர்க்கும் மீன்களை கூட சற்று கூடுதல் கவனம் எடுத்து சரியான முறையில் பராமரிப்பில் வளர்த்து வரும் பொழுது நாம் வளர்க்கும் கலர் மீன்களால் கூட இவ்வளவு நாட்களாக நமது வீட்டில் இல்லாமல் இருந்த செல்வம் திடீரென வீட்டில் சேர ஆரம்பிப்பதை நீங்களே உணர்வீர்கள்.
அஞ்சநேயர் பூஜை
மேலும் உங்கள் வீட்டில் தென்மேற்கு திசையில் ஆஞ்சநேயர் பஞ்ச ஸ்பரூவ திரூ உருவ புகைப்படத்தை வைத்திருப்பது மிகவும் சிறப்பானது. அது மட்டுமில்லாமல் அடிக்கடி உங்கள் வீட்டில் ஆஞ்சநேயரை வேண்டி பூஜை செய்வது இன்னும் சிறப்பானதாக இருக்கும் இதனால் உங்கள் வீட்டில் உள்ள செல்வ வளம் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும் லட்சுமி குபேரன் மற்றும் சுவஸ்தி சின்னம் ஆகியவற்றை உங்களது வீட்டில் வெளிப்புற கேட்டில் வைத்திருப்பது இன்னும் சிறப்பானதாக இருக்கும் இதனால் உங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகிக்கொண்டே இருக்கும்.