நீங்கள் 1 ரூபாய் செலவு செய்தால் கூட திருப்பி 1000 ரூபாயாக உங்களிடம் வர வேண்டுமா ?

இன்றைய நாட்களில் பண பிரச்சனை என்பது அனைவருக்கும் உள்ளது பண பிரச்சனை உள்ளது என்பதால் அவர்கள் வேலைக்கு செல்லாமல் உழைக்காமல் உள்ளார்கள் என்று அர்த்தம் கிடையாது. அவர்கள் செலவு செய்யும் பணம் வருமானத்தை விட அதிகமாக இருக்கலாம். இது போன்று குடும்ப சூழ்நிலை உள்ளவர்கள் தான் பண பிரச்சினையால

By ·

இன்றைய நாட்களில் பண பிரச்சனை என்பது அனைவருக்கும் உள்ளது பண பிரச்சனை உள்ளது என்பதால் அவர்கள் வேலைக்கு செல்லாமல் உழைக்காமல் உள்ளார்கள் என்று அர்த்தம் கிடையாது. அவர்கள் செலவு செய்யும் பணம் வருமானத்தை விட அதிகமாக இருக்கலாம். இது போன்று குடும்ப சூழ்நிலை உள்ளவர்கள் தான் பண பிரச்சினையால் அவதிப்படுவது அதிகம். அதுவும் அவர்கள் செலவு செய்யும் பணம் நல்ல காரியங்களுக்கு செலவு செய்தால் கூட ஒரு மனநிறைவாக இருந்துவிடும். ஆனால் அவர்கள் செலவு செய்வதெல்லாம் வீண் செலவு தான் இருக்கும் இப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் மனம் இப்படி நிம்மதியாக இருக்கும். அதற்காக அவர்கள் செலவை குறைக்கவும் முடியாது வருமானத்தையும் கூட்ட முடியாது. அப்படிப்பட்ட நபர்களுக்காகதான் இந்த பதிவு 1 ரூபாய் செலவு செய்தால் கூட 1000 ரூபாயாக திருப்பி உங்களிடம் வரும்.

மகிழ்ச்சியாக செய்ய வேண்டும்

முதலில் நமக்கு ஒரு செலவு வருகிறது என்றால் உடனே அதற்காக வருந்தக்கூடாது நாம் எதற்காக செலவு செய்தாலும் செலவு செய்யும் போது நம் மனநிலை எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியான மனநிலையில் நாம் செலவுகள் செய்யும்போது அந்த பணம் நம்மிடம் வரும் என சாஸ்திரங்கள் கூறுகின்றனர். அதாவது நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் சந்தோஷமாக செய்யும் போது அதனுடைய பலனும் நன்றாகவே கிடைக்கும் என்று பலரும் கூறுவார்கள். அதே விஷயம் தான் இங்கே நீங்கள் செலவு செய்யும் போது சந்தோஷமாக செய்தால் நீங்கள் செலவு செய்தற்கு உண்டான பணமும் உங்களிடம் திரும்ப வந்து சேர்ந்துவிடும்

வசியம்

அதேபோல் நாம் வீட்டில் செலவுக்காகவோ அல்லது வேறொரு நபருக்கு கடனாகவோ பணத்தை கொடுக்கும் போது, ஏன் நீங்கள் உங்கள் கையில் இருந்து யாருக்கு பணம் கொடுத்தாலும், பணத்தை கொடுக்கும் போது ஒரு சில தாந்திரிகம் மாந்திரீக வார்த்தைகளை பயன்படுத்தும் பொழுது உங்கள் கையில் இருந்து வெளியேறும் பணம் மறுபடியும் பல மடங்காக பெருகி உங்களிடமே வரும். நாம் பயன்படுத்து இந்த வார்த்தைகள் வசியம் மந்திரம் என்று கூறுவார்கள் இந்த மந்திரம் சொல்வதன் மூலம் பணம் உங்கள் இடம் வசியமாகி இருக்குமாம்.

வசிய வார்த்தை

அப்படி நீங்கள் செலவு செய்யும் போது அல்லது பணத்தை வேறு யாருக்கும் கையில் கொடுக்கும் போதும் நீங்கள் கொடுக்கும் பணம் பல மடங்கு பெரிய உங்களிடமே வருவதற்கு “ஓம் ஹ்ரீம் ஹம் நமஹ” என்ற இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது பணத்தை உங்களின் நெஞ்சுக்கு நேராக வைத்து மனதார உங்கள இஷ்ட தெய்வம், குல தெய்வத்தை நினைத்து இந்த பணம் திரும்ப எனக்கு பல மடங்காக பெருகி வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன் சந்தோஷமான மனநிலையுடன் கொடுக்க வேண்டும்.

வீட்டில் இருந்து வெளியேறும் போது

ஆனால் நாம் பணம் கொடுக்கும் இடத்தில் வைத்து இவ்வாறு மந்திரத்தை சொல்லி வேண்டிக் கொண்டிருக்க முடியாது அல்லவா ஆகையினால் செய்ய தயக்கமாக இருப்பவர்கள் கூட வீட்டில் இருந்து பணத்தை எடுத்துச் செல்லும்போது இது மந்திரத்தை சொல்லி உங்கள் இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்திடம் வேண்டிக் கொண்டு பின் பணத்தை கொண்டு செல்லுங்கள். பின் நீங்கள் யாரிடம் பணம் கொடுக போகிறீர்களோ அவர்களிடம் பணம் கொடுக்கும் போது இந்த பணம் திரும்ப என்னிடம் வரவேண்டும் என்று நினைத்தாலே போதும்.

ஏஞ்சல் எண்

அதே போன்று இன்னொரு முறையும் உள்ளது அதாவது ஏஞ்சல் எண் என்று சொல்வார்கள். இந்த ஏஞ்சல் எண் கிரகத்தில் இருக்கும் ஆற்றலை இழுத்து நம் செலவு செய்யும் பணத்தை வசியம் செய்து அது பல மடங்காக பெருகி நம்மிடமே திரும்பி வருமாறு செய்யும். அப்படி பணத்தை மற்றெவரிடம் கொடுக்கும் போது 1403 என்ற இந்த எண்ணை மனதிற்குள் நிணைத்து நீங்கள் கொடுக்கும் இந்த பணம் பல மடங்காக பெருகி உங்களிடமே திரும்ப வர வேண்டும் என்று நினைத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக இந்த பணம் வசியமாகி உங்களிடமே திரும்பி வரும். இங்கு யாரும் விருப்பப்பட்டு செலவுகள் செய்வது கிடையாது செலவுகள் என்பது கண்டிப்பாக நாம் வாழ்வில் இருக்கத்தான் செய்யும். இது போன்ற வீண் செலவுகள் செய்தாலும் பணம் உங்களிடம் திரும்ப வர நம்பிக்கையோடு இந்த பரிகாரங்களை செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

Recipes AMP · Quick view
View full