கஷ்டங்களை நீக்கக்கூடிய பஞ்ச தீப வழிபாடு!!

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும். அவரவர்களின் கர்ம வினைகளின் அடிப்படையில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். இந்த பிறப்பில் நாம் அனுபவிக்க கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நடக்கிறது. அதனால் நம்முடைய கர

By ·

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும். அவரவர்களின் கர்ம வினைகளின் அடிப்படையில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். இந்த பிறப்பில் நாம் அனுபவிக்க கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நடக்கிறது. அதனால் நம்முடைய கர்ம வினைகளை தீர்ப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் அதற்கு தான தர்மங்கள் சிறப்பான விஷயமாக திகழ்கிறது. அனைவராலும் தான தர்மங்களை செய்ய முடியாது எனவே தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு அதன் மூலமாக கர்ம வினைகளை தீர்க்கலாம். அதற்கான வழிப்பாட்டு முறையை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

சிவபெருமான் வழிபாடு

மனதார யாருக்கும் எந்த கஷ்டத்தையும் தரவில்லை ஆனால் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள் வருகிறது என்று ஒரு சிலர் புலம்புவார்கள். அவர்கள் எல்லாம் கர்ம வினைகளை நீக்கக்கூடிய தெய்வமாகிய சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். கர்ம வினைகளை அழிக்கும் தெய்வமாக சிவபெருமான் திகழ்கிறார். அதனால் சிவபெருமான் வழிபாடு கர்ம வினைகளை நீக்கி மறுபடியும் பிறவாத நிலையை அடையச் செய்யும். திங்கட்கிழமை சிவபெருமான் வழிபாடு மிகவும் நல்லது.

கர்ம வினைகளை அளிக்கக்கூடிய வழிபாடு

திங்கட்கிழமை அன்று மாலை 6:00 மணிக்கு மேல் ராஜகோபுரத்தில் இருக்கக்கூடிய சிவபெருமான் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு முதலில் ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து சிவபெருமானை மனதார நினைத்து வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று குறைந்தபட்சம் 10 நிமிடமாவது மனம் உருகி வேண்ட வேண்டும். பிறகு ஐந்து அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த ஐந்து தீபங்களுக்கும் ஏதாவது ஒரு மலரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் இதற்கு பெயர் பஞ்சாட்சர தீபம் என்று அழைக்கப்படுகிறது. தீபத்தை ஏற்றி முடித்த பிறகு நேராக கருவறைக்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய நந்தி பகவானை முழுமனதோடு வழிபாடு செய்து விட்டு சிவபெருமானையும் தரிசனம் செய்து அர்ச்சனை செய்ய வேண்டும். திங்கட்கிழமை தோறும் சிவபெருமான் ஆலயத்தை பஞ்சதீப வழிபாட்டை செய்வதன் மூலம் சீக்கிரத்திலேயே நம்முடைய கர்ம வினைகள் தீர்ந்துவிடும். கர்ம வினைகள் தீர்வதன் மூலம் உன் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக குறைந்துவிடும். இந்த பஞ்ச தீப வழிபாட்டை நிச்சயமாக செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.

இதனையும் படியுங்கள் : பண வசியம் ஏற்பட செய்ய வேண்டிய பஞ்சமி பரிகாரம்!!

Recipes AMP · Quick view
View full