என்ன டிபன் செய்தாலும் தொட்டு சாப்பிட ருசியான பன்னீர் பட்டர்‌ மசாலா இப்படி செஞ்சி பாருங்க!

நம்ம குழந்தைகளுக்கும், கணவருக்கும் சப்பாத்தி, தோசை-னா சட்னி, குருமா-னு தான் செஞ்சு கொடுத்து இருப்போம். கொஞ்சம் வித்தியாசமா அவங்களுக்கு பன்னீர் பட்டர் மசாலா செஞ்சு அசத்துவோம். இளைஞர்கள் அதிகம் விரும்பி உண்ணும் பொருளாக மாறியிருக்கிறது பன்னீர். பன்னீரை பயன்படுத்தி பல வகையான உணவுகளை

By ·

நம்ம குழந்தைகளுக்கும், கணவருக்கும் சப்பாத்தி, தோசை-னா சட்னி, குருமா-னு தான் செஞ்சு கொடுத்து இருப்போம். கொஞ்சம் வித்தியாசமா அவங்களுக்கு பன்னீர் பட்டர் மசாலா செஞ்சு அசத்துவோம். இளைஞர்கள் அதிகம் விரும்பி உண்ணும் பொருளாக மாறியிருக்கிறது பன்னீர். பன்னீரை பயன்படுத்தி பல வகையான உணவுகளை செய்யலாம் மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் குறிப்பாக அதில் செய்யப்படும் பன்னீர் பட்டர் மசாலா என்றால் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அசைவத்தை காட்டிலும் பன்னீரில் புரதசத்து அதிகம் உள்ளது. அவ்வளவு நல்லது உடம்புக்கு.

சப்பாத்திக்கு குருமாவை விடவும் பன்னீர் பட்டர் மசாலாவை பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக சைவ பிரியர்களுக்கு பன்னீர் சிக்கன் போன்றது. இதில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் அசைவத்தை காட்டிலும் பன்னீர் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. சப்பாத்திக்கு கிழங்கு, குருமா என சாப்பிட்டு போரடித்தவர்கள் நிச்சயம் பன்னீர் பட்டர் மசாலாவை முயற்சி செய்து பார்க்கலாம். வட இந்திய உணவான இது தற்போது தென்னிந்தியாவிலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக மாறியுள்ளது.

புளிப்பு, காரம், ஸ்வீட் என பன்னீர் பட்டர் மசாலா நாவுக்கு அலாதியான ருசியை தருவதால் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். பானி பூரிக்கு பிறகு தென்னிந்தியாவில் பன்னீர் பட்டர் மசாலா தனி இடத்தை பிடித்து விட்டது. அதே நேரம் இதை வீட்டில் செய்வதை காட்டிலும் பலரும் ஹோட்டலில் வாங்குவதையே வழக்கமாக வைத்துள்ளனர். கடையில் வாங்கி சாப்பிடுவதை விடவும் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. வட இந்திய சுவையில் பனீர் பட்டர் மசாலா செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

Recipes AMP · Quick view
View full