பன்னீர் சீஸ் சமோசா மொறு மொறுன்னு சுலபமாக வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்கள்!
சமோசா இந்தியாவின் பிரபலமான மாலை நேர உணவு வகை, காபி மற்றும் டீ யுடன் சுவையாக இருக்கும். சமோசாகளில் பல வகைகள் உண்டு, உருளைக்கிழங்கு சமோசா, காய்கறி சமோசா, மற்றும் வெங்காய சமோசா என்று சொல்லிக் கொண்டே போகலாம். நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்த தின்பண்டங்களில் ஒன்று சமோசா. இதை விரும்ப
சமோசா இந்தியாவின் பிரபலமான மாலை நேர உணவு வகை, காபி மற்றும் டீ யுடன் சுவையாக இருக்கும். சமோசாகளில் பல வகைகள் உண்டு, உருளைக்கிழங்கு சமோசா, காய்கறி சமோசா, மற்றும் வெங்காய சமோசா என்று சொல்லிக் கொண்டே போகலாம். நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்த தின்பண்டங்களில் ஒன்று சமோசா. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
எத்தனை முறை வெளியில் சென்றாலும், அத்தனை முறையும் ஒரு டீயும், சமோசாவும் சாப்பிடாமல் வீட்டிற்கு திரும்பிய சரித்திரம் யாருடைய வாழ்க்கையிலும் இருக்காது. இது குழந்தைகளுக்கு மட்டும் பிடித்த ஒன்று அல்ல, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று சமோசா. இது செய்வது பெரிய விஷயம் அல்ல, வீட்டில் இருக்கும் பொருட்கள் போதும். இதை செய்து சாப்பிட்டு பாருங்கள்.
சீஸ் பனீர் சமோசா ரெசிபி, பெயருக்கு ஏற்றாற்போல், கேப்சிகம், வெங்காயம் மற்றும் பிற மசாலாப் பொருட்களுடன் சீஸ் மற்றும் பனீரைச் சேர்த்து செய்யப்படுகிறது. இது வித்தியாசமான செய்முறை ஆனால் வாயில் நீர் ஊறவைக்கும் சுவையைத் தருகிறது. இந்த சீஸி மற்றும் சுவையான சமோசா ரெசிபி மிக விரைவாக செய்யக்கூடியது. இது கொத்தமல்லி அல்லது புதினா சட்னி அல்லது டொமேட்டோ சாஸ் உடன் சேர்ந்து சாப்பிட சுவையாக இருக்கும்.