பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய மார்கழி மாத வெள்ளிக்கிழமை பரிகாரம்!
மார்கழி மாதம் என்பது மிகவும் தெய்வீகம் நிறைந்த ஒரு மாதம். இந்த மாதத்தில் நாம் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பொதுவாக பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அதனுடைய தாக்கம் பாதிப்புகள் தெரியும் மற்றவர்களுக்கு அது சாதாரணம
மார்கழி மாதம் என்பது மிகவும் தெய்வீகம் நிறைந்த ஒரு மாதம். இந்த மாதத்தில் நாம் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பொதுவாக பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அதனுடைய தாக்கம் பாதிப்புகள் தெரியும் மற்றவர்களுக்கு அது சாதாரணமாகவே தெரியும் அதனை அனுபவிப்பவர்களுக்கு தான் அதனுடைய வலி என்ன என்று புரியும். அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கின்றது அதற்கு ஏற்றார் போல அவர்களும் பிரச்சனைகளை சமாளித்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மார்கழி மாதத்தில் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளிக்கிழமை
மகாலட்சுமி தாயார் மிகவும் உகந்த நாள் தான் வெள்ளிக்கிழமை. அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமை என்று நாம் வீட்டில் எந்த பரிகாரம் செய்தாலும் வீட்டில் உள்ள தரித்திரம் நீங்கி மகாலட்சுமி தாயாரை நம் வீட்டிற்கு அழைத்து வரலாம். மார்கழி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை மிகவும் உகந்த மகாலட்சுமி தாயார் பிடித்தமான கிழமையாக உள்ளது. எனவே இந்த வெள்ளிக்கிழமையை தவறவிடாமல் எளிமையான நிலை வாசல் பரிகாரத்தை செய்ய வேண்டும்.
பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்
இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு கல் உப்பு கிராம்பு நெய் பச்சை கற்பூரம் இவைகள் தான் தேவை. இவை அனைத்துமே மகாலட்சுமி தாயாரின் அம்சம் கொண்ட பொருட்கள் இவற்றை நம் வீட்டில் நிரந்தரமாக வைத்திருந்தாலே மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
இந்த பரிகாரம் செய்வதற்கு ஏற்ற இடம் வீட்டு நிலை வாசல். நிலை வாசலில் அஷ்டலட்சுமிகள் கூறியிருக்கிறார்கள் மேலும் குலதெய்வமும் குடி இருக்கிறது அதனால் அந்த இடத்தில் நாம் செய்யும் போது வீட்டில் உள்ள தரித்திரம் அனைத்தும் நீங்கி அஷ்டலட்சுமிகள் மற்றும் குலதெய்வம் வீட்டிற்குள் வரும் என்று கூறப்படுகிறது. இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒரு அகல் விளக்கை எடுத்து அதில் கல் உப்பை நிரப்பி கல்லுப்பை சுற்றி 7 கிராம்புகளை வைத்துக்கொள்ள வேண்டும் அந்த கிராம்புகள் நல்ல கிராம்புகளாக இருக்க வேண்டும். அதற்கு நடுவே ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி பச்சை கற்பூரத்தை உதிர்த்துவிட்டு பச்சை கற்பூரத்தை ஏற்ற வேண்டும் அது எவ்வளவு நேரம் இருக்கிறது அவ்வளவு நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்.
பரிகாரம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். பச்சைக் கற்பூரம் இருந்து முடிந்தவுடன் அதனை அப்படியே வைத்து விட்டு மறுநாள் காலை அதிலுள்ள பொருட்களை போடுகின்ற தண்ணீரில் அல்லது யாருடைய கால் தடமும் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதாய் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் துயரங்கள் கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக விலகிவிடும். மகாலட்சுமி தாயார் மச்சம் குலதெய்வம் இவர்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். எனவே இந்த பரிகாரத்தை முழுமனதோடு ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் நிச்சயமாக நல்லதே நடக்கும்.
இதனையும் படியுங்கள் : வெள்ளிக்கிழமை அன்று மறந்தும் செய்யக்கூடாத சில விஷயங்கள்