கடன் தீர ஆடி செவ்வாய் கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்!!
கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்து வந்தால் கடன் பிரச்சினைகள் தீர்ந்து போகும். கடன் தொடர்பான பிரச்சனைக்கு காரண கர்த்தாவாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் எனவே செவ்வாய்க்கிழமை அன்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். கேது பக
கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்து வந்தால் கடன் பிரச்சினைகள் தீர்ந்து போகும். கடன் தொடர்பான பிரச்சனைக்கு காரண கர்த்தாவாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் எனவே செவ்வாய்க்கிழமை அன்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். கேது பகவானும் கடன் சம்பந்தமான பிரச்சனைக்கு உரியவர்தான். அதனால் செவ்வாய் கிழமை அன்று கேது பகவானுக்கு உரிய நேரத்தில் இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம்.
கடனுக்கான கிரகங்கள்
கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு காரண கர்த்தாவாக சில கிரகங்கள் உள்ளன. அந்த வகையில் சனி பகவான் செவ்வாய் பகவான் மற்றும் கேது பகவான் மூவரும் கடன் சம்மந்தமான பிரச்சனைக்கு காரணமாக விளங்க கூடியவர்கள். இந்த மூவருக்குரிய நேரத்தில் சிறப்பான வழிபாடுகளை செய்து வந்தால் கடன் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். அதனால் தான் செவ்வாய்க்கிழமை அன்று கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் கடன் சீக்கிரத்திலேயே அடைந்து விடும். அதேபோல் சனிக்கிழமை யாரிடம் இருந்தும் கடன் வாங்கக்கூடாது. வாங்கினால் அது கடனை இன்னும் அதிகமாக்கும். கேது பகவானுக்கு உரிய நேரமாக கருதப்படக் கூடிய எமகண்ட நேரத்தில் கேது பகவானுக்கு உரிய தானியமான கொள்ளு பயிரை வைத்த இந்த பரிகாரத்தை செய்யலாம்.
பரிகாரம் செய்யும் முறை
செவ்வாய்க்கிழமை என்று காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் கேது பகவானுக்கு உரிய கொள்ளு பயிரை வைத்து இந்த பரிகாரத்தை செய்யலாம். வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து அதில் கொள்ளு பயிரை நிரப்பி அதற்கு மேல் 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் என்று உங்களிடம் இருக்கக்கூடிய பணத்தை வைத்து முழு மனதோடு கடன் பிரச்சினைகள் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். மேலும் எமகண்ட நேரம் முடிவதற்குள் அதை எடுத்து ஒரு கவருக்குள் போட்டு வைக்க வேண்டும். நாம் மற்றவர்களிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கும் போது இந்த பணத்தையும் அதனோடு சேர்த்துக் கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் விரைவிலேயே கடன் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். முழு மனதோடு ஆடி செவ்வாய்க்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : கடன் தீர்க்கும் ஆடி மாத வழிபாடு