செலவான பணம் மீண்டும் நம்மிடமே வந்து சேர செய்ய வேண்டிய பரிகாரம்!!
பண வரவு அதிகமாக இருக்க வேண்டும் கையில் அதிகமாக பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் பீரோவிலும் பணம் கட்டு கட்டாக சேர வேண்டும் வந்த பணம் எந்த சூழ்நிலையிலும் கையை விட்டுப் போகக் கூடாது என்று அனைவருமே நினைப்பது வழக்கம். அதேபோல் வீட்டிற்கு வந்த மகாலட்சுமியை பீரோவில் வைத்து பயன்படுத்த
பண வரவு அதிகமாக இருக்க வேண்டும் கையில் அதிகமாக பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் பீரோவிலும் பணம் கட்டு கட்டாக சேர வேண்டும் வந்த பணம் எந்த சூழ்நிலையிலும் கையை விட்டுப் போகக் கூடாது என்று அனைவருமே நினைப்பது வழக்கம். அதேபோல் வீட்டிற்கு வந்த மகாலட்சுமியை பீரோவில் வைத்து பயன்படுத்தாமலேயே பூட்டி வைப்பதும் தவறான ஒன்று. வரதுக்கு ஏற்ற செலவு இருக்க வேண்டும் ஆனால் என்னதான் செலவு செய்தாலும் மீண்டும் நமக்கு பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் வீட்டிலும் பீரோவிலும் பணம் தேங்கி கிடக்க கூடாது அப்படி செலவு செய்த பணம் இரட்டிப்பாக நம் கைக்கு வந்து சேர மகாலட்சுமியை மனதில் நினைத்துக் கொண்டு இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள்.
செலவு செய்த பணம் மீண்டும் கைக்கு திரும்ப வர செய்ய வேண்டியவை
பர்ஸில் இருந்து பணத்தை எடுத்து அதனை அப்படியே முழுவதாக விரித்தபடி கொடுக்கக் கூடாது. அந்த பணத்தை உங்கள் கையில் வைத்துக் கொண்டு உங்களைப் பார்த்து மடித்தவாறு ஒரு மடிப்பு மடித்து பணம் சீக்கிரம் என்னிடமே வந்து சேர வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டே பணத்தை அடுத்தவர்கள் கையில் கொடுக்க வேண்டும்.
கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கும் போது பணம் செலவாகிறது என்று மனதில் நினைத்துக் கொண்டே சோகத்தோடு பணத்தை செலவு செய்யக்கூடாது சந்தோஷமாக மன நிறைவோடு செலவு செய்ய வேண்டும் அப்பொழுதுதான் மகாலட்சுமி தேவியார் மனம் மகிழ்ச்சி அடைந்து மறுபடியும் அந்த பணத்தை நம்மிடமே கொடுப்பார்.
பணத்தை சோகமாக கொடுக்கும் போது சோகமாக சென்ற மகாலட்சுமி திரும்பவும் நம்மிடம் வரமாட்டாள் உங்களுடைய பணத்தை தேவைக்காக செலவு செய்யும்போது மேற்குறிப்பிட்ட முறைகளை பின்பற்றி செலவு செய்யுங்கள். அப்பொழுது செலவு செய்த பணம் இரட்டிப்பாக உங்களிடமே வந்து சேரும்.
இதனையும் படியுங்கள் : பணம் அதிகமாக சேர வீட்டில் உள்ள அரிசியில் மறைத்து வைக்க வேண்டிய ஒரு பொருள்!!