பணவரவை அதிகரிக்கும் இளநீர் பரிகாரம்!
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால் எதிர்பாராத வகையில் தான் பணவரவு கொட்ட வேண்டும் அந்த வகையில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலே வீடு வாங்குவது கட்டுவது கடன் பிரச்சனைகளை சமாளிப்பது குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவது சேமிப்பது என பலவகையான நல்ல விஷயங்கள
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால் எதிர்பாராத வகையில் தான் பணவரவு கொட்ட வேண்டும் அந்த வகையில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலே வீடு வாங்குவது கட்டுவது கடன் பிரச்சனைகளை சமாளிப்பது குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவது சேமிப்பது என பலவகையான நல்ல விஷயங்களை செய்வதற்கு உதவியாக இருக்கும். அப்படி பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு பணமழை கொட்ட வேண்டும் என்றால் இந்த இளநீர் வைத்து செய்யக்கூடிய எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள்
மகாலட்சுமியின் அருள்
வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் வேண்டும் என்றால் நாம் வழிபட வேண்டிய தெய்வம் மகாலட்சுமி தேவியார் தான். மகாலட்சுமி தேவியாரை நாம் வழிபாடு செய்து அவருடைய அருளை பெற்றாலே, அதன் மூலமாக குரு பகவானுடைய அருளையும் சுக்கிர பகவானுடைய அருளையும் நாம் பெற முடியும் எனவே நாம் மகாலட்சுமி தயாருக்கு செய்ய வேண்டிய வழிபாடு குரு பகவான் உடைய அருளையும் பெறும்படியாக இருத்தல் வேண்டும் அப்படிப்பட்ட ஒரு பரிகாரம்தான் நான் இப்பொழுது பார்க்க போகிறோம்
இளநீர் பரிகாரம்
நம் வீட்டில் இருந்து கிழக்கு திசையில் இருக்கக்கூடிய தென்னை மரத்திலிருந்து ஒரு இளநீரை பறித்து வரவேண்டும் அப்படி தென்னை மரம் இல்லாதவர்கள் கிழக்கு திசையில் சென்று இளநீர் வாங்கி வரவேண்டும். இப்படி நாம் பறித்த அல்லது வாங்கி வந்த இளநீரை வீட்டிற்கு கொண்டு வந்து சுத்தம் செய்து அதனை பூஜை அறையில் வைத்து விட வேண்டும். அதனை ஒரு மஞ்சள் நிற துணியில் முட்டையாக கட்டி சந்தனம் குங்குமம் பூக்கள் வைத்து வாய்ப்பாடு செய்ய வேண்டும் பிறகு அதனை மகாலட்சுமி தயார் உடைய பாதத்தில் வைத்து பொருளாதார நிலை உயர வேண்டும் தடைகள் அனைத்தும் விலக வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொண்டு அந்த மூட்டையை அப்படியே நிலை வாசலில் கட்டிவிட வேண்டும்.
பொருளாதார நிலையை மாற்றக்கூடிய பரிகாரம்
இந்த பரிகாரத்தை செய்வதன் மூலமாக குருபகவான் சுக்கிர பகவான் மற்றும் மகாலட்சுமியினுடைய அருள் நமக்கு முழுவதுமாக கிடைக்கும். இந்த இளநீரை ஒரு முறை கட்டினாலே போதும் அதன் பிறகு உங்களுக்கு தோணும்போது மறுபடியும் இதே பரிகாரத்தை மீண்டும் செய்யலாம். உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து கொள்ளலாம். அப்படி புதிதாக இல்லை நீர் மாற்றும் போது பழைய மூட்டையை ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விட வேண்டும். இந்த பரிகாரத்திற்கு தென்னை மரத்திலிருந்து இளநீரை பிரஷ்ஷாக பறித்து வந்து செய்வதன் மூலமாக பல மடங்கு பலன்கள் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : கடன் பிரச்சினைகள் தீர பிரியாணி இலை பரிகாரம்!