பண தேவையை பூர்த்தி செய்யும் பரிகாரம்!!

பணம் பத்தும் செய்யும் என்று ஒரு பழமொழியே உள்ளது. இந்த காலகட்டத்தில் பணம் இல்லாமல் எதுவும் நம்மால் செய்யவே முடியாது அந்த அளவிற்கு பணத்தின் மதிப்பு அதிகரித்து விட்டது என்றே கூறலாம். அப்படிப்பட்ட பணம் நம்முடைய வாழ்க்கையில் பலதரப்பட்ட விஷயங்களுக்காக தேவைப்படுகிறது. அந்த தேவைகள் நிறைவ

By ·

பணம் பத்தும் செய்யும் என்று ஒரு பழமொழியே உள்ளது. இந்த காலகட்டத்தில் பணம் இல்லாமல் எதுவும் நம்மால் செய்யவே முடியாது அந்த அளவிற்கு பணத்தின் மதிப்பு அதிகரித்து விட்டது என்றே கூறலாம். அப்படிப்பட்ட பணம் நம்முடைய வாழ்க்கையில் பலதரப்பட்ட விஷயங்களுக்காக தேவைப்படுகிறது. அந்த தேவைகள் நிறைவேறிவிட்டால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகளும் குறைவு பணத்தேவியை பூர்த்தி செய்ய மகாலட்சுமி படத்திற்கு பின்னால் வைக்க வேண்டிய ஒரு பொருளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பணத்தை வகையை பூர்த்தி செய்ய பல வழிகளில் முயற்சி செய்திருந்தாலும் மகாலட்சுமி தேவியின் அருள் இருந்தால் நம்மளால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் அப்படி மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கும் பண தேவையை பூர்த்தி செய்யவும் இந்த தாந்திரீக பரிகாரத்தை பின்பற்றி பாருங்கள்.

பரிகாரம் செய்ய வேண்டிய முறை

விடியற்காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அருகில் இருக்கக்கூடிய மகாலட்சுமி தேவியாரின் புகைப்படத்திற்கு நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அம்பாளுக்கு நெய் வைத்தியமாக நம்மிடம் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும். அடுத்ததாக நம்மிடம் இருக்கக்கூடிய புதிய ரூபாய் நோட்டு 10 ரூபாயாக இருந்தாலும் அதனை எடுத்துக் கொள்ள வேண்டும். பழைய ரூபாய் நோட்டை பயன்படுத்தக் கூடாது புதிய ரூபாய் நோட்டை இரண்டு கைகளிலும் பிடித்தவாறு மகாலட்சுமி தாயாரை பார்த்து பண தேவை என்னவோ அதனை கூறி மனதார வழிபட வேண்டும். பிறகு அந்த ரூபாய் நோட்டை கசக்காமல் சுருட்டாமல் அதற்கு மேல் சிவப்பு நிற நூலை வைத்து ஏழு முறை சுற்ற வேண்டும். அதன் பிறகு அந்த ரூபாய் நோட்டை அப்படியே எடுத்து மகாலட்சுமி தேவியாரின் படத்திற்கு பின்னால் வைக்க வேண்டும். நம் முன்னோர்கள் மஞ்சள் நிற துணியில் நாணயங்களை காணிக்கையாக முடிந்து வைத்து வேண்டுதல் வைப்பார்கள் அதேபோல் இந்த பரிகாரமும் வேண்டிய வேண்டுதலையும் நிறைவேற்றிக் கொடுக்கும். 48 நாட்களுக்கு மகாலட்சுமி தாயார் என் புகைப்படத்திற்கு பின்னால் இருக்க வேண்டும் அதன் பிறகு சிவப்பு நிற நூலை கால்படாத இடத்தில் போட்டுவிட்டு ரூபாய் நோட்டை பத்திரமாக வைத்துக் கொள்ளலாம்.

பரிகாரம் செய்ய வேண்டிய நேரம்

இந்த பரிகாரத்தை நமக்கு பணம் தேவைப்படும் நேரத்தில் நியாயமான கோரிக்கைகளுக்காக செய்ய வேண்டும். ஆடம்பர வாழ்க்கையை தவிர்த்து மிகவும் அவசரத்தை வைக்க மட்டுமே இந்த பரிகாரம் செய்வது நல்லது விடியற்காலையில் இந்த பரிகாரம் செய்வது மிகவும் நல்லது. இந்த எளிமையான பரிகாரத்தை மகாலட்சுமி தேவியாரின் அருளை பெறுவதற்கு செய்து பாருங்கள் நிச்சயமாக நல்லதே நடக்கும்.

இதனையும் படியுங்கள் : கடனிலிருந்து விடுபட மகாலட்சுமி வழிபாடு

Recipes AMP · Quick view
View full