பணக்கஷ்டம் தீர வழிபாடு!!
பணக்கஷ்டம் என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று. பணத்துக்கு என்ன செய்வது என்று அனுதினமும் ஒரு சில சிந்தித்து கொண்டு தான் இருப்பார்கள். இன்றைய நடைமுறை வாழ்க்கையாக பணக்கஷ்டம் உள்ளது என்று சொல்லலாம். அன்றாட செலவுக்கு எப்படி சேமிப்பது எதிர்பாராத நேரத்தில் வரக்கூடிய பண செலவுகளை சமாளிக்
பணக்கஷ்டம் என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று. பணத்துக்கு என்ன செய்வது என்று அனுதினமும் ஒரு சில சிந்தித்து கொண்டு தான் இருப்பார்கள். இன்றைய நடைமுறை வாழ்க்கையாக பணக்கஷ்டம் உள்ளது என்று சொல்லலாம். அன்றாட செலவுக்கு எப்படி சேமிப்பது எதிர்பாராத நேரத்தில் வரக்கூடிய பண செலவுகளை சமாளிக்க என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள்.குபேர வழிபாட்டை செய்து பாருங்கள் நிச்சயமாக பணக்கஷ்டம் தீரும். அந்த குபேர வழிபாட்டை பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
குபேர விளக்கு
பணக்கஷ்டம் தீர்வதற்கு முதலில் குபேர விளக்கு ஒன்றை வீட்டில் வாங்கி வைக்க வேண்டும். பூஜை பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய அனைத்து கடைகளிலும் இந்த விளக்கு கிடைக்கும். குபேரனுக்கு உகந்த இந்த விளக்கு வீட்டில் வியாழக்கிழமை தோறும் இருந்தால் பல பிரச்சனைகள் தீரும். சொத்து தகராறுகள் நிலுவையில் உள்ள வழக்குகள் என அனைத்துமே தீர்ந்துவிடும். தீராத பிரச்சனைகளும் தீர்வதற்கு இந்த குபேர விளக்கை ஏற்றுவது மிகவும் நல்லது.
குபேர எந்திரம்
பணக்கஷ்டம் தீர்வதற்கு குபேர எந்திரத்தையும் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் ஒரு பேப்பரில் குபேர எந்திரத்தின் எண்களை கட்டும் போட்டு வரைந்து வைத்துக் கொண்டு அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பிறகு குபேர விளக்கு ஏற்ற வேண்டும்.
பணக்கஷ்டம் தீர ஏற்ற வேண்டிய குபேர விளக்கு
குபேர விளக்கை சுத்தம் செய்து கழுவி காயவைத்து வியாழக்கிழமை மாலை 5:30 மணிக்கு மேல் 8 மணிக்குள் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பச்சை நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பச்சை நிறம் குபேரனுக்கு உகந்தது என்பதால் பச்சை நிறத்தில் கொண்டு விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது. மூன்று ஐந்து அல்லது ஏழு என்ற எண்ணிக்கையில் திரியை திரித்து குங்கும பொட்டு வைத்து தீபம் ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றும் போது திரியானது நின்று எரிய வேண்டும் எனவே திரியை நன்றாக முறுக்கி விட வேண்டும். குபேர விளக்கிற்கு போடப்படும் திரியானது நன்றாக எரியும்படி இருக்க வேண்டும். குபேர படம் குபேர விக்ரகம் இருந்தால் மிகவும் நல்லது ஐந்து ரூபாய் நாணயங்களை ஒரு கண்ணாடி குவளையில் 51 அல்லது 108 என்ற எண்ணிக்கையில் எப்பொழுதும் வைத்துக்கொள்ள வேண்டும்.
குபேர நாணய அர்ச்சனை
வியாழக்கிழமை அன்று அர்ச்சனையை விரும்புபவர்கள் நாணயங்களால் “ஓம் குபேராய நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி வந்தால் தீராத பண கஷ்டமும் தீர்ந்துவிடும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த தீபத்தை ஏற்றி நாணய அர்ச்சனை செய்து வழிபட்டு வர வேண்டும். சக்தி வாய்ந்த இந்த எளிமையான வழிபாட்டை செய்துவர நிச்சயமாக பணக்கஷ்டம் தீரும். தெய்வீக அருள் இருந்தால் நிச்சயமாக உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : செல்வத்தை பெருக்கக் கூடிய வெள்ளிக்கிழமை பரிகாரம்!!