பணம் மற்றும் கடன் பிரச்சினை தீர செய்ய வேண்டிய வழிபாடு!!
வாழ்க்கையில் பணம் என்ற ஒன்று இல்லாமல் யாராலும் வாழவே முடியாது. இந்த உலகத்தில் உள்ள யாராலும் கடன் இல்லாமல் வாழ முடியாது. பணவரவு இல்லாவிட்டால் வாழ்க்கையை நடத்தவே முடியாது அந்த வாழ்க்கையை நடத்துவதற்காக பல பேரிடமிருந்து கடன் வாங்க வேண்டிய சூழலும் உண்டாகும். இதனால் பலவிதமான பிரச்சனைகள
வாழ்க்கையில் பணம் என்ற ஒன்று இல்லாமல் யாராலும் வாழவே முடியாது. இந்த உலகத்தில் உள்ள யாராலும் கடன் இல்லாமல் வாழ முடியாது. பணவரவு இல்லாவிட்டால் வாழ்க்கையை நடத்தவே முடியாது அந்த வாழ்க்கையை நடத்துவதற்காக பல பேரிடமிருந்து கடன் வாங்க வேண்டிய சூழலும் உண்டாகும். இதனால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழலில் ஏற்படும். இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து பணவரவை அதிகரித்து கடன் பிரச்சினையில் இருந்து வெளியே வருவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றியும் ஆன்மீகம் குறித்த தகவல் பார்க்கலாம்.
செவ்வாய் பகவான்
கடன் பிரச்சனை ஏற்பட காரணமாக திகழக்கூடியவர் தான் செவ்வாய் பகவான். கடன் பிரச்சினை மட்டுமில்லாமல் சொந்தமாக வீடு வாங்குவது வீட்டை விற்பது வம்பு வழக்கு போன்ற அனைத்திற்கும் காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் தான். அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்கு உரியக்கிழமையாக திகழ்வது செவ்வாய்க்கிழமை. அந்த செவ்வாய்க்கிழமை அன்று நரசிம்மருக்கு உகந்த அஸ்வினி நட்சத்திரமும் வருவதால் அந்த நாள் அன்று நாம் நரசிம்மரை வழிபாடு செய்தோமானால் கடன் பிரச்சனை தீரும். செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்த வருவதால் இதற்கான பலன் நமக்கு அதிகமாகவே கிடைக்கும்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
இந்த பரிகாரத்தை இரவு 12 மணிக்குள் செய்து முடித்து விட வேண்டும். இதற்கு ஒரு வெள்ளை நிற பேப்பர் எடுத்து அதில் சிவப்பு நிறம் ஐயால் முருகப்பெருமானின் கையில் இருக்கக்கூடிய வேலை வரைய வேண்டும். மேலும் அதற்கு மேல் நல்ல ஒரு ஏலக்காயை வைத்து நன்றாக மடித்த உங்களுடைய இடது கையில் வைத்து அதற்கு மேல் வலது கையை வைத்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமான் குலதெய்வம் முருகப்பெருமான் நரசிம்மர் அனைவரையும் மனதார நினைத்துக் கொண்டு உங்களைத் தேடி பணம் வருவது போல் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.
பரிகாரத்தின் போது உச்சரிக்க வேண்டிய வார்த்தை
“என்னை தேடி அனைத்து பக்கங்களிலிருந்தும் பணம் வந்து கொண்டிருக்கிறது”என்று தொடர்ச்சியாக 15 நிமிடம் கூறிய பிறகு அப்படியே எடுத்துக் கொண்டு போய் செவ்வாய் பகவானுக்குரிய தானியமான துவரம் பருப்பு டப்பாவில் போட்டு விட வேண்டும். துவரம் பருப்பு நாம் சமையலுக்கு பயன்படுத்தலாம் எந்த துவரம் பருப்பாக இருந்தாலும் பரவாயில்லை ஒரு மாதம் கழித்து ஏலக்காயையும், வேல் வரைந்த பேப்பரையும், யாருடைய கால் தடமும் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். முருகப்பெருமாள் மற்றும் நரசிம்மரின் அருளால் பணவரவு அதிகரித்து கடன் பிரச்சினை தீரும். அஸ்வினி நட்சத்திரமும் செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து வரக்கூடிய அபூர்வமான நாள் அன்று இந்த முறையில் நாம் இரண்டு தெய்வங்களையும் வழிபாடு செய்தோம் என்றால் கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
இதனையும் படியுங்கள் : கடன் தீர மல்லிகை பூ பரிகாரம்