இட்லி தோசைக்கு கொஞ்சம் வித்தியாசமாக மாதுளை பழ சட்னி இப்படி செஞ்சி பாருங்க!
இந்திய மக்கள் வித விதமாக சட்னி வைத்து சாப்பிடுவது வழக்கம். காரசாரமான சட்னி முதல் இனிப்பான சட்னி வரை சுவைகள் வித்தியாசப்படும். இந்திய வீடுகளில் சட்னி இல்லாமல் எந்த டிபனும் நிறைவடையாது. தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும், சட்னி எப்
இந்திய மக்கள் வித விதமாக சட்னி வைத்து சாப்பிடுவது வழக்கம். காரசாரமான சட்னி முதல் இனிப்பான சட்னி வரை சுவைகள் வித்தியாசப்படும். இந்திய வீடுகளில் சட்னி இல்லாமல் எந்த டிபனும் நிறைவடையாது. தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும், சட்னி எப்போதும் சுவையை அதிகரிக்கிறது. இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு.
இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வைங்க.
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா! அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா! அப்படியானால் ஒரு வித்தியாசமான சட்னியாக மாதுளை சட்னியை செய்யுங்கள். இந்த மாதுளை சட்னி செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக இந்த சட்னி வேலை முடிந்து வீட்டிற்கு சோர்வாக வருபவர்கள், வேகமாக செய்து சாப்பிடும் வகையில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். சொல்லப்போனால், இது பேச்சுலர்களுக்கு ஏற்ற ரெசிபியும் கூட மற்றும் உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் ஊட்டச்சத்து குணங்களும் இதில் நிறைந்துள்ளன.