- Prep
- 5 min
- Cook
- 15 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
உங்கள் வீட்டில் சப்பாத்தி அதிகம் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு கொண்டு அடிக்கடி சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ்ஷை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அடுத்தமுறை உருளை கத்திரிக்காய் கறி செய்யுங்கள். இந்த கறி மிகவும் டேஸ்டியாகவும் இருக்கும். முக்கியமாக இப்படி நீங்கள் உருளைக்கிழங்கு சைடுடிஷ் செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
பொதுவாக உருளைக்கிழங்கு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. என்ன குழம்பு வைத்தாலும், காய்கறிகள் இருந்தாலும் உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கு தான் அனைவரும் ஆசைப்படுவார்கள். உருளைக்கிழங்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள் அந்த வகையில் உருளைக்கிழங்கு மசியல், வறுவல், பொரியல் அப்படின்னு சொல்லிக்கொண்டே போகலாம். எது செஞ்சு கொடுத்தாலும் உருளைக்கிழங்கு அப்படின்னா போதும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று சுவையான உருளை கத்திரிக்காய் கறி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இந்த உருளைக்கிழங்கு கத்திரிக்காய் கறி செய்வதற்கு ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே போதுமானது. இந்த ரெசிபியை ஒரு தடவை செய்து பார்த்து விட்டால் அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீர்கள். சுவையான இந்த உருளைக்கிழங்கு கத்திரிக்காய் கறி ரெசிபிக்கு எல்லாரும் அடிமையாகிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டாக இருக்கும். இந்த ரெசிபியை சப்பாத்திக்கு மட்டுமின்றி இட்லி , தோசை, ரசம் சாதம், சாம்பார் சாதம், பருப்பு சாதம், லெமன் சாதம், புளி சாதம், தயிர் சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் சேர்த்து சாப்பிடலாம் ருசியா இருக்கும். இப்போது வாருங்கள் இந்த சுவையான உருளை கத்திரிக்காய் கறி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு அசைவக் குழம்பு
Ingredients
Method
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், நறுக்கிய உருளைக்கிழங்கு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
அதன்பிறகு மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், உப்பு, மல்லி தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் தக்காளி மற்றும் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
அதன்பிறகு தண்ணீர் நன்கு வற்றி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான உருளை கத்திரிக்காய் கறி தயார்.






