- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பச்சை பட்டாணியும் உருளைக்கிழங்கும் சேர்த்து நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க அதுல பெரும்பாலும் எல்லாருக்கும் குருமா ரொம்ப பிடிக்கும். ஆனா இப்ப நம்ம பச்சை பட்டாணி இல்லாட்டியும் கூட வெறும் உருளைக்கிழங்கு வச்சு ஒரு சூப்பரான குருமா எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதுக்கு நம்ம மசாலா அரைச்சு சேர்த்து வைக்க போறோம் அதனால டேஸ்ட் அவ்ளோ ருசியா இருக்கும். இதுக்கு குழம்பு மிளகாய்த்தூள் நம்ம வீட்ல அரைச்சு செய்யறது ரொம்ப ரொம்ப நல்லது.
பெரும்பாலும் எல்லாரும் வீட்லயும் குழம்பு மிளகாய்த்தூள் இருக்கும் அது மட்டுமே போதுமானது இந்த குருமாவுக்கு. இதுல பட்டை வகைகளும் சேர்த்து அரைச்சு வைக்கும்போது கறி குழம்பு மாதிரி ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். இந்த ருசியான டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த செம டேஸ்டான உருளைக்கிழங்கு குருமா சுட சுட சாதத்துக்கு போட்டு சாப்பிடும் போது அவ்வளவு ருசியா இருக்கும்.
புலாவ் ரெசிபிக்கும் இந்த உருளைக்கிழங்கு குருமா அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும். தேங்காய் சாதம் தக்காளி சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும். அது மட்டும் இல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷன் ஆக இருக்கும். இந்த உருளைக்கிழங்கு குருமா ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான உருளைக்கிழங்கு குருமா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கோழி குருமா இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
Ingredients
Method
உருளைக்கிழங்கை ஒரு குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். அதனின் தோல் உரித்து சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் பூண்டு தக்காளி பட்டை கிராம்பு ஒரு டீஸ்பூன் சோம்பு, மிளகு, சீரகம் சேர்த்து வதக்கி வைக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி வைத்துள்ளதை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கருவேப்பிலை சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்த விழுதை சேர்த்து குழம்பு மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
நன்றாக கொதி வந்து குழம்பு வெந்ததும் உருளைக்கிழங்கை சேர்த்து கொத்தமல்லி இலைகள் தூவி 5 நிமிடத்தில் இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு குருமா தயார்.






