கடன் சுமை நீங்க செய்ய வேண்டிய வழிபாடு!!
அனைவருக்குமே மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது கடன் பிரச்சினை தான். எவ்வளவு முயற்சி செய்தாலும் என்னதான் சம்பாதித்தாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும் அதனால் கடன் பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம்மிடம் பணம் இல்லா
அனைவருக்குமே மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது கடன் பிரச்சினை தான். எவ்வளவு முயற்சி செய்தாலும் என்னதான் சம்பாதித்தாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும் அதனால் கடன் பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம்மிடம் பணம் இல்லாத சமயத்தில் பிறரிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு தான் தீரும். அப்படிப்பட்ட சூழ்நிலையை அதிக நாட்கள் நீடிக்க விடாமல் முடிந்த அளவிற்கு கடனை அடைத்து அந்த பிரச்சனையிலிருந்து வெளியே வரவேண்டும். அதற்கு விநாயகப் பெருமானை வழிபாடு செய்தால் நிச்சயமாக நல்லதே நடக்கும் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும் முறையை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
விநாயகப் பெருமான்
விநாயகப் பெருமானை காரிய தடை நீங்குவதற்காக வழிபாடு செய்வார்கள். ராகு கேது தோஷம் இருப்பவர்களும் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யலாம். எந்த ஒரு வேண்டுதலுக்காக விநாயகப் பெருமானை வழிபாடு செய்தாலும் நிச்சயமாக விநாயக பெருமான் நமக்கு நன்மைகளை வழங்குவார். அதற்கு நாம் முழு மனதோடு நம்பிக்கையோடு வழிபாடு செய்ய வேண்டும். கடன் சுமையை நீக்க வேண்டும் என்றால் மேலும் மேலும் கடன் வாங்காமல் இருக்க வேண்டும். அதற்கு விநாயகப் பெருமானை சில தாந்திரீக முறைப்படி வழிபட வேண்டும்.
அகத்திக்கீரை வழிபாடு
இந்த வழிபாட்டை சதுர்த்தி தினத்தன்று விநாயகப் பெருமானுக்கு உகந்த திதியில் செய்ய வேண்டும். விரதம் இருந்து செய்தால் மிகவும் சிறப்பானது வளர்பிறை சதுர்த்தி தேய்பிறை சதுர்த்தி எதில் வேண்டுமானாலும் விநாயகப் பெருமானுக்கு எமகண்ட நேரத்தில் வழிபாடு செய்யலாம். எமகண்ட நேரத்தில் விநாயகர் பெருமான் கோவிலுக்கு சென்று அங்குள்ள விநாயகருக்கு அகத்திக்கீரைகள் அர்ச்சனை செய்துவிட்டு பிறகு இரண்டு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி சிவப்பு நிறத்தில் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இதனை தொடர்ந்து சதுர்த்தி என்று செய்து வர கடன் பிரச்சினைகள் தீரும் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விநாயகர் பெருமானின் படத்திற்கு முன்பாக அகல்விளக்கு ஏற்று வைத்து விட்டு அகத்தியர் அர்ச்சனை செய்யலாம் மறுநாள் அந்த கீரையை எடுத்து பசு மாட்டிற்கு தானமாக கொடுக்க வேண்டும். மிகவும் எளிமையான இந்த தாந்திரீக வழிபாட்டை நம்பிக்கையோடு செய்து விநாயக பெருமானுடைய அருளையும் முழுவதுமாக பெறுங்கள்.
இதனையும் படியுங்கள் : வாழ்க்கையில் முன்னேற விநாயகர் வழிபாடு