காலை உணவுக்கு ருசியான ராகி முருங்கை கீரை அடை இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!

உடல் ஆரோக்கியத்துக்கு காலை உணவு மிக மிக அவசியம். எந்த ஒரு காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்க்க கூடாது. அதே போல் அந்த காலை உணவு எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவாக இருப்பதை காட்டிலும் தானியங்கள் மற்றும் இயற்கை உணவாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் கா

By Prem Kumar · 25/1/2024

உடல் ஆரோக்கியத்துக்கு காலை உணவு மிக மிக அவசியம். எந்த ஒரு காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்க்க கூடாது. அதே போல் அந்த காலை உணவு எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவாக இருப்பதை காட்டிலும் தானியங்கள் மற்றும் இயற்கை உணவாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் காலை நேரத்தில் இதுப்போன்ற ஆரோக்கியமான உணவை எடுத்து கொண்டால் அந்த நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கலாம்.

உடலுக்கு அதிகப்படியான சத்து கொடுக்கும் தானியங்களில் ராகிக்கு முதலிடம் உண்டு. ராகியில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால், எலும்பு, பற்கள் என அத்தனைக்கும் நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இது உடல் சூட்டைத் தணித்து, உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். அதிகப்படியான தொப்பையால் அவதிப்படுகிறவர்கள் தொப்பை முழுக்க கரைந்து, தட்டையான வயிறைப் பெற வேண்டுமென்றால், தினமும் காலை உணவில் ராகியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தமிழர்களின் சிறந்த காலை நேர உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ளது ராகி அடை எனச் சொல்லப்படும் கேழ்வரகு அடை. இதில் இருக்கும் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து உடல் மற்றும் மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு காலை நேரத்தில் ராகியில் செய்த அடை, தோசை, உப்புமா ஆகியவற்றை கொடுப்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. ராகியில் முருங்கைக்கீரை சேர்த்து, அந்த காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் எல்லாம் அடை சுட்டு தருவார்கள். அதே சுவையில் மிருதுவான ராகி முருங்கைக் கீரை அடை எப்படி செய்வது என்பதை பற்றி தான், இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இதனையும் படியுங்கள் : ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

Recipes AMP · Quick view
View full