தீபாவளிக்கு ஸ்பெஷலாக வீட்டில் ரசமலாய் தித்திக்கும் சுவையில் இப்படி ஈஸியாக செஞ்சி பாருங்க!

தீபாவளி பண்டிகை நெங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் வீட்டில் பலகாரங்களை செய்ய திட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். பொதுவாகவே தீபாவளி வருகின்றது என்றாலே அனைவரது வீட்டிலும் இனிப்பின் சுவை அதிகமாகவே வீசும். பொதுவாக தீபாவளி பலகாரம் என்றாலே நினைவிற்கு வருவது, முறுக்கு, அதிரசம், சீடை, மை

By ·

தீபாவளி பண்டிகை நெங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் வீட்டில் பலகாரங்களை செய்ய திட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். பொதுவாகவே தீபாவளி வருகின்றது என்றாலே அனைவரது வீட்டிலும் இனிப்பின் சுவை அதிகமாகவே வீசும். பொதுவாக தீபாவளி பலகாரம் என்றாலே நினைவிற்கு வருவது, முறுக்கு, அதிரசம், சீடை, மைசூர்பாக் போன்றவை தான். அதிலும் ரசமலாய்க்கு பல மடங்கு மவுசு உண்டு. அனைவரும் விரும்பி உண்ணும் வகையில், குறைந்த பொருட்களைக் கொண்டு எளிமையான முறையில் செய்யக்கூடிய இனிப்பு தான் ‘ரசமலாய். பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான்.

அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான ரசமலாய் செய்வது எப்படி என்று பார்ப்போம். இந்த ரசமலாய் செய்வது மிகவும் கடினமான வேலை என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர், ஆனால் இந்த ரசமலாய் மிக எளிமையாக செய்துவிட முடியும். ரசமலாய் பெங்காலியில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இனிப்பு வகை. இது முற்றிலுமாக பாலை பயன்படுத்தி செய்யப்படுகிறது. இனிப்புகளில் ரசகுல்லா விற்கு இனிப்பு பிரியர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ அதை விட ரசமலாய்க்கு பல மடங்கு மவுசு உண்டு.

ரசகுல்லாவும் ரசமலாய்யும் ஏறத்தாழ ஒரே செய்முறையை கொண்டவைதான். ஆனால் சர்க்கரை தண்ணீருக்கு பதிலாக ரசமலாயை ராப்ரியில் ஊர விடுகிறார்கள். இந்தியாவில் உள்ள மேற்கு வங்கத்தில் உதயமானது என்று ஒரு சாராரும். இது ஒடிசாவில் உதயமானது என்று மற்றொரு சாராரும் கூறுகிறார்கள். இவை இந்தியா மட்டுமின்றி வங்க தேசம் மற்றும் பாக்கிஸ்தானிலும் பிரபலமடைந்து இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ரசமலாய், வீட்டிலேயே மிகவும் சுலபமான முறையில் செய்யலாம்.

Recipes AMP · Quick view
View full