வீட்டில் சட்டுன்னு ஏதாவது இனிப்பு செய்ய விரும்பினால் இந்த ரவா துள்ளியை முயற்சி செய்து பாருங்கள்!!
பொதுவாக நம்ம வீட்ல ஏதாவது விசேஷங்கள் வந்துச்சு அப்படின்னா நம்ம கேசரி செய்வோம் அப்படி இல்ல அப்படின்னா பால் பாயாசம் செய்வோம் ஆனா சட்டுனு அதேசமயம் வித்தியாசமா ஏதாவது ஒரு ஸ்வீட் செய்யணும் அப்படின்னா வீட்ல ரவை இருந்தா அத வச்சு ரவா கேசரி செய்யாமல் ரவா துள்ளி செய்து பாருங்கள். இதற்கு நி
பொதுவாக நம்ம வீட்ல ஏதாவது விசேஷங்கள் வந்துச்சு அப்படின்னா நம்ம கேசரி செய்வோம் அப்படி இல்ல அப்படின்னா பால் பாயாசம் செய்வோம் ஆனா சட்டுனு அதேசமயம் வித்தியாசமா ஏதாவது ஒரு ஸ்வீட் செய்யணும் அப்படின்னா வீட்ல ரவை இருந்தா அத வச்சு ரவா கேசரி செய்யாமல் ரவா துள்ளி செய்து பாருங்கள். இதற்கு நிறைய பொருட்கள் கூட தேவையில்லை. சிரமமும் கிடையாது. மொத்தமாக 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து முடித்துவிடலாம்.
இந்த ஸ்வீட் செய்வதற்கு ஒரு கப் ரவை இருந்தால் போதும் அனைவருக்கும் பிடித்த ருசியான ஸ்வீட் செய்து அசத்தலாம். குறிப்பாக குழந்தைகள் எனக்கு இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சுவையான ரவா துள்ளி தான் செய்ய போகிறோம். ரவையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாமிரம், வைட்டமின் E, வைட்டமின் B, கால்சியம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
உங்கள் குழந்தைகள் கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கும் திண்பண்டங்களை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் வீட்டிலேயே இது போன்ற ரவா துள்ளி செய்து கொடுத்தால் பாதுகாப்பானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுபவர்கள் அடுத்த முறையும் இதே போல் உங்களை செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு இந்த ரவா துள்ளி சுவையாக இருக்கும். பள்ளி விட்டு வரும் உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் இதுபோன்ற ஸ்வீட் செய்து கொடுக்கலாம். இன்று ரவா வைத்து அருமையான ரவா துள்ளி செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இதனையும் படியுங்கள் : ரவை சீஸ் பணியாரம் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து அசத்துங்க!