செல்வங்களை தரக்கூடிய கந்த சஷ்டி நாள் பரிகாரம்!!

வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களையும் கொடுக்கக்கூடியவள் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும்போது நமக்கு ஐஸ்வர்யம் கிடைக்கும். ஐஸ்வர்யத்தோடு சேர்ந்து நமக்கு உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து வாழ்க்கை சிறப்பாக மாற வேண்டும் என்றால் முருகப்பெருமானையும் வழிபாடு

By ·

வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களையும் கொடுக்கக்கூடியவள் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும்போது நமக்கு ஐஸ்வர்யம் கிடைக்கும். ஐஸ்வர்யத்தோடு சேர்ந்து நமக்கு உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து வாழ்க்கை சிறப்பாக மாற வேண்டும் என்றால் முருகப்பெருமானையும் வழிபாடு செய்யலாம். சகல ஐஸ்வர்யத்தையும் நமக்கு அருள் புரிவதற்கு கந்த சஷ்டி நாள் அன்று செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

முருகப்பெருமான்

முருகப்பெருமானை முழுமனதோடு சரணாகதி அடைந்து வழிபட்டு வர வாய்ப்புகளும் கிடைக்கும். அனைத்து செல்வங்களும் கிடைக்கும். முருகப்பெருமானிடம் பெரிய கோரிக்கைகளை வைக்காமல் மனதார நினைத்து வழிபாடு செய்தால் உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் மிருகப் பெருமான் கொடுத்து அருள்வார்.

கந்த சஷ்டி வழிபாடு

கந்த சஷ்டி நாள் வழிபாடு வெள்ளிக்கிழமை வருவதால் வீட்டின் வாசலில் மஞ்சள் தண்ணீர் தெளித்து கொள்ள வேண்டும். ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீர் எடுத்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வீட்டின் பூஜை அறையில் வைத்து விடுங்கள். பூஜைகள் அனைத்தையும் முடித்த பிறகு மஞ்சள் தண்ணீரை எடுத்து வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும். காலை மாலை என இரு வேலைகளிலும் இந்த தண்ணீரை தெளிக்கலாம். கந்த சஷ்டியின் மூன்றாவது நாள் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வருவதால் இந்த மஞ்சள் தீர்த்தத்தை வீட்டில் தெளிக்கும் போது வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் ஐஸ்வர்யமும் பெருகும். இரு வேளைகளிலும் மஞ்சள் தண்ணீர் தெளிக்க முடியாதவர்கள் மாலை நேரத்தில் மட்டும் கூட தெளித்து விடலாம். கந்த சஷ்டியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக மிருகப் பெருமானை வழிபாடு செய்வோம் அப்படி வழிபாடு செய்வதோடு சேர்த்து இந்த எளிமையான பரிகாரத்தையும் செய்து பாருங்கள்.

இதனையும் படியுங்கள் : வெற்றிகளை குவிக்க செய்யும் முருகன் மந்திரம் ‌

Recipes AMP · Quick view
View full