பண வசியம் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரம்!!

இந்த உலகத்தில் அனைவரும் மிகவும் கடினமாக உழைப்பது பணத்திற்காக தான். பணம் அதிகமாக பெருகுவதற்கு நிறைய பரிகாரங்கள் உள்ளது. பாரம்பரியமான முறைப்படி அனைத்து இடங்களிலுமே பண வசியம் உண்டாக செய்யக்கூடிய தாந்த்ரீக பரிகாரங்கள் நிறையவே உள்ளது. வீட்டில் பண வசியம் உண்டாக செய்ய வேண்டிய ஒரு எளிமைய

By ·

இந்த உலகத்தில் அனைவரும் மிகவும் கடினமாக உழைப்பது பணத்திற்காக தான். பணம் அதிகமாக பெருகுவதற்கு நிறைய பரிகாரங்கள் உள்ளது. பாரம்பரியமான முறைப்படி அனைத்து இடங்களிலுமே பண வசியம் உண்டாக செய்யக்கூடிய தாந்த்ரீக பரிகாரங்கள் நிறையவே உள்ளது. வீட்டில் பண வசியம் உண்டாக செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருள்

உங்களிடம் ஏதாவது புது நோட்டு இருந்தால் அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் அது பத்து ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரையில் எந்த நோட்டாக இருந்தாலும் பரவாயில்லை. புத்தம் புதிதாக பலருடைய கைகளில் படாத சுத்தமான நோட்டாக இருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் அந்த நாள் அன்று அசைவம் சாப்பிடாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.

பரிகாரம் செய்ய வேண்டிய முறை

வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்து விட்டது பித்தளை தாம்பாளத்தின் மீது ஒரு சிவப்பு நிற பட்டு துணியை விரித்து அதன் மீது ரூபாய் நோட்டை வைக்க வேண்டும். ஒரு வெள்ளியால் ஆன கிண்ணத்தில் சுத்தமான சந்தனத்தை எடுத்து அதனுடன் அத்தர் அல்லது பன்னீர் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும். ரூபாய் நோட்டின் நான்கு பக்கங்களிலும் சந்தனத்தை தடவி மஞ்சள் அட்சதையை அதன் மேல் தூவி விட வேண்டும். பிறகு இந்த மந்திரத்தை அமைதியாக அமர்ந்து உச்சரிக்க வேண்டும். வீட்டில் வறுமை எதுவும் ஏற்படக்கூடாது பிரச்சனைகள் அனைத்தும் தீர, தானியத்திற்கு பஞ்சம் வரக்கூடாது அன்று மனதார வழிபாடு செய்து கொள்ள வேண்டும்.

மந்திரம்

“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் மகாலட்சுமியை நமஹ”

என்ற மந்திரத்தை 9 முறை உச்சரிக்க வேண்டும். இது நவகிரக தோஷங்களை நீக்கி வீட்டில் ஏற்படக்கூடிய தொழில் ரீதியான பிரச்சினைகளை சரி செய்யும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும் பதவி உயர்வு கிடைக்கும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம்,அதிர்ஷ்டம் கிடைக்கும். பூஜை முடித்த பிறகு அந்த ரூபாய் நோட்டை எடுத்து மடிக்காமல் அப்படியே பணத்தை சேமித்து வைக்கின்ற இடத்தில் வைக்க வேண்டும். வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமை நாட்களில் அந்த பணத்திற்கு சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். இதனால் நிச்சயமாக தொழிலில் நல்ல வளர்ச்சி கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : பணம் சேர பர்ஸ் டிப்ஸ்!!

Recipes AMP · Quick view
View full