பணம் உங்கள் வீட்டை நோக்கி வருவதற்கு செய்ய வேண்டிய பரிகாரம்!!

என்னதான் நாம் மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அந்த பணம் செலவாகாமல் நம் வீட்டிற்கு வருவதற்கு நமக்கு தெய்வத்துடைய அருளும் தேவை பணம் ஒரு சிலருக்கு கையில் வந்தவுடன் தங்காமல் செலவாகி போய் விடும். அப்படி செலவாகாமல் இருப்பதற்கு பணக்கஷ்டங்கள் தீர்ந்து நம் கையிலும் பணம் அதிகமாக தங்குவ

By ·

என்னதான் நாம் மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அந்த பணம் செலவாகாமல் நம் வீட்டிற்கு வருவதற்கு நமக்கு தெய்வத்துடைய அருளும் தேவை பணம் ஒரு சிலருக்கு கையில் வந்தவுடன் தங்காமல் செலவாகி போய் விடும். அப்படி செலவாகாமல் இருப்பதற்கு பணக்கஷ்டங்கள் தீர்ந்து நம் கையிலும் பணம் அதிகமாக தங்குவதற்கு நிறைய பரிகாரங்களை செய்து இருப்போம். ஆனால் வீட்டில் உள்ள ஏலக்காயை வைத்து இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயமாக பணம் வீடு தேடி வரும்.

பரிகாரம் செய்ய வேண்டிய முறை

முதலில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி அனைத்து தெய்வங்களுக்கும் பூ போட்டு உள்ளங்கைகளில் ஏலக்காயை வைத்து உங்களுக்கு என்ன பண கஷ்டம் இருக்கிறதோ அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு என்னை நோக்கி பணம் பெற வேண்டும் என்னை நோக்கி பணம் தர வேண்டும் என்று 108 முறை சொல்ல வேண்டும். நீங்கள் இந்த மந்திரத்தை சொன்ன பிறகு அந்த ஏலக்காய் அந்த மந்திரத்தை ஈர்த்துக் கொள்ளும் இந்த ஏலக்காயை கொண்டு போய் உங்கள் வீட்டில் உள்ள அரிசி மூட்டை புதைத்து வைக்க வேண்டும். வீட்டில் இருக்கும் நபர்களை தவிர வெளி ஆட்களுக்கு இது தெரியக்கூடாது‌.

பரிகாரம் செய்ய வேண்டிய நேரம்

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் செய்வது நல்லது. இந்த நேரத்தை தவற விட்டுவிட்டால் இரவு தூங்குவதற்கு முன்பு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். 48 நாட்களுக்குள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நீங்கள் நினைத்தது நடக்கும் பணப்பிரச்சனை சரியாகும் 48 நாட்கள் கழித்து ஏலக்காயை எடுத்து யாருடைய கால் தடமும் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும். ஒரே ஒரு ஏலக்காயை வைத்து இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய பண பிரச்சனையை சரி செய்து பணத்தை வீட்டிற்கு கொண்டு வரலாம். இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது ஒரே ஒரு ஏலக்காயை மட்டுமே நாம் பயன்படுத்த போகிறோம்.

இதனையும் படியுங்கள் : பணப்பற்றாக்குறை நீங்க பரிகாரம்!

Recipes AMP · Quick view
View full