எதிர்மறை ஆற்றலும் வாஸ்து தோஷமும் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!!
வாஸ்து பகவான் அவருடைய நித்திரையில் இருந்து கண் விழிக்கக்கூடிய நாளையும் நேரத்தையும் தான் நாம் வாஸ்து நாள் மற்றும் வாஸ்து நேரம் என்று குறிப்பிடுகிறோம். அந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய அனைத்து செயல்பாடுகளுமே எந்தவித தடைகளும் இல்லாமல் நிறைவேறும். வாஸ்து ரீதியாக நாம் சில விஷயங்களை செ
வாஸ்து பகவான் அவருடைய நித்திரையில் இருந்து கண் விழிக்கக்கூடிய நாளையும் நேரத்தையும் தான் நாம் வாஸ்து நாள் மற்றும் வாஸ்து நேரம் என்று குறிப்பிடுகிறோம். அந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய அனைத்து செயல்பாடுகளுமே எந்தவித தடைகளும் இல்லாமல் நிறைவேறும். வாஸ்து ரீதியாக நாம் சில விஷயங்களை செய்வது நிச்சயமாக வெற்றியைக் கொடுக்கும். வாஸ்து நேரத்தில் நாம் சொந்த வீடு கட்டுவதற்கு தேவையான பரிகாரங்களை செய்யலாம். வாஸ்து நிறத்தில் செய்யக்கூடிய ஒரு சில பரிகாரங்கள் நம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கும். அப்படி வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்க கூடிய எளிமையான வாஸ்து தோஷ பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
வாஸ்து பகவான்
வாஸ்து பகவான் சிவபெருமானின் தீவிர பக்தர். இவர் எட்டு வருடத்திற்கு ஒரு முறை தான் கண்விழிப்பார். அந்த நேரத்தில் சொந்தமாக வீடு கட்ட ஆரம்பிப்பது மண் மற்றும் மண் சார்ந்த செயல்களில் ஈடுபடும். பொழுது அதில் எந்தவித தடைகளும் இல்லாமல் சீக்கிரத்திலேயே அந்த ஒரு காரியம் நடந்து முடியும் அதனால் தான் பலரும் வாஸ்து நாள் அன்று மனையடி பூஜை செய்வது, வாசல் கால் வைப்பது, போர் போடுவது, போன்ற விஷயங்களை செய்கிறார்கள். மேலும் நம் வீட்டிற்குள்ளே எதிர்மறை ஆற்றல்களும் நீங்குவதற்கு எளிமையான பரிகாரத்தை செய்யலாம்.
வாஸ்து நேரம்
வாஸ்து நேரத்தில் வாஸ்து பகவானை நினைத்து வழிபாடு செய்து விட்டு ஒரு சிறிய தட்டில் அல்லது அகல்விளக்கில் பச்சை கற்பூரத்தை வைத்து வீட்டு நிலை வாசலில் வைத்து விட வேண்டும். வாஸ்து நேரத்தில் பச்சைக் கற்பூரம் வீட்டு நிலை வாசலுக்கு வெளியே இருந்தால் எந்த விதமான எதிர்மறை ஆற்றல்களும் வீட்டிற்குள் நுழையாது வாஸ்து தோஷமும் நீங்கும். மேலும் வாஸ்து நேரத்தில் சிவபெருமானுக்கு முன்பாக வாஸ்து பகவானை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்துவிட்டு பச்சரிசி மாவினால் கோலம் போட்டு கோலத்தின் நான்கு புறங்களிலும் நெய் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். பிறகு உங்களால் முடிந்த அளவு ஏதாவது ஒன்றை செய்து நெய்வேதியமாக வைத்து “ஓம் சிவாய நமோ நம” என்று மந்திரத்தை 36 முறை கூறி வழிபாடு செய்ய வேண்டும். வாஸ்து பகவானை நினைத்து வாஸ்து நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக வீட்டில் உள்ள தோஷங்கள் நீங்கி எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நல்லதே நடக்கும்.
இதனையும் படியுங்கள் : ஒற்றுமையை அதிகரிக்கும் உப்பு மிளகு பரிகாரம்