பண வசியம் ஏற்பட செய்ய வேண்டிய பரிகாரம்!!
இந்த உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு பொருள்தான் பணம் யாரிடத்தில் அதிகமாக இருக்கிறதோ அவர்களுடைய பேச்சை அனைத்து இடங்களிலும் பெரியதாக கருதப்படும் பணம் இல்லாத பட்சத்தில் ஒருவரை யாரும் ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஆற்றல் மிகுந்த பணத்தை எப்படி நாம் வ
இந்த உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு பொருள்தான் பணம் யாரிடத்தில் அதிகமாக இருக்கிறதோ அவர்களுடைய பேச்சை அனைத்து இடங்களிலும் பெரியதாக கருதப்படும் பணம் இல்லாத பட்சத்தில் ஒருவரை யாரும் ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஆற்றல் மிகுந்த பணத்தை எப்படி நாம் வசியம் செய்வது என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
பணத்தையும் கொடுக்கும் பெருமாள்
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று ஒரு சிலர் நினைப்பார்கள். ஆனால் அதற்கு கடினமான உழைப்பை நாம் போட வேண்டும். அதே சமயம் இந்த சமுதாயத்தில் ஒரு உயரிய அந்தஸ்தை பெறுவதற்கு பணம் மிகவும் முக்கியமான ஒன்று பணத்திற்கு தேவதையாக விளங்கக்கூடிய மகாலட்சுமி தாயாரை நாம் வணங்குவதால் மட்டும் நமக்கு பணம் கிடைக்காது. மகாலட்சுமி தேவியாரை தவிர்த்து லட்சுமி நாராயண பெருமாளை வணங்குவதாலும் கூட பக்தர்களுக்கு மகாலட்சுமி தயார் உடைய அருளும் முழுவதுமாக கிடைக்கும். அதன் மூலம் பணமும் அதிகரிக்கும்.
பணம் வசியம் ஏற்பட செய்ய வேண்டிய பரிகாரம்
இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும் அங்கு கொடுக்கக்கூடிய துளசி குங்குமம் போன்றவற்றை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் கோவிலில் இருக்கக்கூடிய குடி தண்ணீரையும் ஒரு சிறிய பாட்டிலில் பிடித்த வர வேண்டும். வீட்டிற்கு வந்ததும் ஒரு பச்சை நிற துணியை எடுத்து அதில் நாம் எடுத்து வந்த தண்ணீரை ஊற்றி நன்றாக அலசி துணியை காய போட வேண்டும். அதனை காய வைத்து எடுத்ததும் அதில் பிரசாதமாக கொடுக்கப்பட்ட பூ துளசி குங்குமத்தை வைத்து ஐந்து ரூபாய் நாணயத்தையும் வைத்து மூட்டையாக கட்டி பூஜை அறையில் பெருமாளின் புகைப்படத்திற்கு முன்பாக வைக்க வேண்டும்.
பரிகாரம் செய்ய வேண்டிய நேரம்
பிறகு அந்த மூட்டையை பூஜை அறையிலேயே வைத்திருக்கலாம் இல்லையென்றால் தொழில் செய்யும் இடத்தில் உள்ள கல்லாப்பெட்டியிலும் பணம் வைத்திருக்கக்கூடிய பெட்டியிலும் வைக்க வேண்டும். 15 நாட்கள் வரை அந்த மூட்டை அப்படியே இருக்க வேண்டும் அடுத்த நாள் அதனை ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விட வேண்டும். இந்த பரிகாரத்தை பெருமாளுக்கு உரிய நாட்களாக கருதப்படுகின்ற புதன்கிழமை அல்லது சனிக்கிழமை என்று தான் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அதற்கான பலன் நமக்கு முழுவதுமாக கிடைக்கும். நம்பிக்கையாக பணவரவு பண வசியம் ஏற்படுவதற்கு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : கடனை முழுமையாக அடைக்கும் கோ பரிகாரம்