தீய சக்திகள் மற்றும் பிரச்சனைகள் விலக செய்ய வேண்டிய பரிகாரம்!!
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பிரச்சினைகள் வந்து கொண்டே தான் இருக்கும் அந்த பிரச்சினைகளுக்கு காரணம் என்பதை நாம் தெரிந்து கொள்வதுதான் நல்லது. ஒரு சிலருக்கு கர்ம வினைகளின் அடிப்படையில் பிரச்சனைகள் வரும். ஒரு சிலருக்கு தீய சக்திகளால் பாதிப்புகள் ஏற்படும். எதன் மூலம் பிரச்ச
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பிரச்சினைகள் வந்து கொண்டே தான் இருக்கும் அந்த பிரச்சினைகளுக்கு காரணம் என்பதை நாம் தெரிந்து கொள்வதுதான் நல்லது. ஒரு சிலருக்கு கர்ம வினைகளின் அடிப்படையில் பிரச்சனைகள் வரும். ஒரு சிலருக்கு தீய சக்திகளால் பாதிப்புகள் ஏற்படும். எதன் மூலம் பிரச்சினைகள் வந்தாலும் சரி அந்த பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு நாம் ஒரு வழிபாட்டு முறையை பின்பற்ற வேண்டும். தீய சக்திகளின் பாதிப்பில் இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவதற்கு இந்த பரிகாரம் உதவியாக இருக்கும். அந்த பரிகாரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கர்ம வினைகளின் பாதிப்பு
ஒருவர் செய்த பிரச்சனைகளின் வினையாக ஏற்படக்கூடிய பல பிரச்சினைகள் தாங்க முடியாததாக இருக்கும் அது கர்ம வினைகளின் அடிப்படையிலேயே இருக்கும். கர்ம வினைகளை குறைப்பது ஒன்று மட்டுமே அந்த பிரச்சினைக்கான தீர்வாகும் நம்மால் இயன்ற தான தர்மங்களை முழுமனதோடு செய்ய வேண்டும். தீய சக்திகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கு தெய்வத்தை சரணாகதி அடைய வேண்டும். அப்படி தெய்வத்தை சரணாகதி அடையும் போது தீய சக்திகளால் ஏற்பட்ட பாதிப்புகளும் விலகக்கூடும். அந்த வகையில் இந்த எளிமையான பரிகாரத்தை செய்வதன் மூலம் பிரச்சனைகள் தீரலாம்.
பிரச்சினைகள் தீர செய்ய வேண்டிய பரிகாரம்
பிரச்சனைகள் தீர்ந்து போவதற்கு வெள்ளி கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அதற்கு புள்ளிகளில்லாத நல்ல எலுமிச்சம் பழம் தேவைப்படும். ஆறு எலுமிச்சம் பழங்களை எடுத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கக்கூடிய அம்மன் கோவிலுக்கு போக வேண்டும். அந்த கோவிலில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடக்க வேண்டும். மேலும் அந்த கோவிலில் திரிசூலம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கோபுரமும் இருக்க வேண்டும் இவை அனைத்தும் இருக்கக்கூடிய அம்மன் கோவிலுக்கு எலுமிச்சம் பழத்தை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்.
எலுமிச்சம் பழ பரிகாரம்
அந்த எலுமிச்சம் பழங்களில் இருந்து மூன்று பழங்களை எடுத்து முழுமனதோடு அனைத்து பிரச்சினைகளும் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு திரிசூலத்தில் குத்த வேண்டும். அதன் பிறகு மூன்று பழங்களை குருக்களிடம் கொடுத்து அம்மனின் பாதங்களில் வைத்து தர சொல்லி கேட்க வேண்டும். அதன் பிறகு அம்மனை 9 முறை வலம் வந்து அம்மனின் பாதத்தில் இருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்திலிருந்து ஒரு எலுமிச்சம் பழத்தை மட்டும் திரும்ப கேட்டு வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கி வரும் பொழுது வேறு எங்குமே செல்லக் கூடாது நேராக வீட்டிற்கு வந்து வீட்டின் மையப் பகுதியான ஹாலில் எலுமிச்சம் பழத்தை வைக்க வேண்டும் அல்லது பூஜை அறையிலும் வைக்கலாம். மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த எலுமிச்சம்பழத்தை பார்க்கும்போது காய்ந்த நிலையில் இருந்தால் நம்முடைய பிரச்சனைகள் விரைவில் தீர்ந்து போகக்கூடும். ஒருவேளை அழுகிப் போயிருந்தால் வீட்டில் தீய சக்திகளின் பாதிப்பு உள்ளது என்று அர்த்தம். பிறகு அந்த பாதிப்புகளை நீக்குவதற்குரிய பரிகாரங்களையும் வழிபாட்டையும் செய்ய வேண்டும். அந்த எலுமிச்சம் பழத்தை ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விடுவது நல்லது. தொடர்ச்சியாக இந்த பரிகாரத்தை முழுமனதோடு செய்து வந்தால் தீய சக்திகள் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து போகும்.
இதனையும் படியுங்கள் : கொடுத்த கடனை சீக்கிரம் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரம்!!