நினைத்த காரியத்தை நிறைவேற்ற செய்ய வேண்டிய பரிகாரம்!!
ஒவ்வொருவரும் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருப்பார்கள். அந்த காரியம் நிறைவேறுவதற்காக சில முயற்சிகளையும் எடுப்பார்கள் ஆனால் அந்த காரியத்தில் தடைகள் ஏற்பட்டு நடைபெறாமல் போய்க்கொண்டே இருக்கும். அந்த காரியத்தை வெற்றிகரமாக செய்வதன் மூலம் நம்முடைய வா
ஒவ்வொருவரும் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருப்பார்கள். அந்த காரியம் நிறைவேறுவதற்காக சில முயற்சிகளையும் எடுப்பார்கள் ஆனால் அந்த காரியத்தில் தடைகள் ஏற்பட்டு நடைபெறாமல் போய்க்கொண்டே இருக்கும். அந்த காரியத்தை வெற்றிகரமாக செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் செல்வ வளம் அதிகரிக்கும் என்கின்ற சூழ்நிலையில் நிச்சயமாக அந்த காரியத்தை எந்தவித தடைகளும் இல்லாமல் செய்து முடிப்பதற்கு இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். அதனை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
பரிகாரம் செய்ய தேவையான பொருள்
இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு பிரியாணி இலை தேவைப்படும் மற்றும் குங்குமமும் தேவைப்படும். இந்த பரிகாரத்தை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். நினைத்த காரியம் நடப்பதற்கு அந்த காரியத்தில் தடைகள் ஏற்படாமல் இருப்பதற்கு பிரியாணி இலையை வைத்து இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.
எளிமையான பிரியாணி இலை பரிகாரம்
ஒரு சிறிய பாத்திரத்தில் குங்குமத்தை எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக குழைத்து ஒரு குச்சியை பயன்படுத்தி எந்த காரியம் நிறைவேற வேண்டுமோ அதனை ஒரு பிரியாணி இலையில் எழுத வேண்டும். எழுதிய பிரியாணி இலையை இஷ்ட தெய்வத்தின் படத்திற்கு முன்பாக வைத்து தொடர்ச்சியாக 7 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். ஏழாவது நாள் வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அந்த பிரியாணி இலையை ஒரு அகல் விளக்கில் வைத்து அதன் மேல் பச்சை கற்பூரத்தை வைத்து எரித்து விட வேண்டும். பிரியாணி இலை முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆன பிறகு அந்த சாம்பலில் தண்ணீர் ஊற்றி கரைத்து வன்னி மரம் அல்லது துளசி செடிக்கு அந்த சாம்பலை ஊற்றிவிட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து வந்தால் நினைத்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் விலகும் செல்வ வளம் பெருகி நினைத்த காரியங்கள் அனைத்தும் நன்றாகவே நடந்து முடியும்.
இதனையும் படியுங்கள் : கடன் தீர்க்கக்கூடிய எலுமிச்சம் பழ பரிகாரம்!!