இந்த எளிய பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் தங்கமும் பணமும் சேர்ந்து கொண்டே இருக்கும் !!
வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும், பண வரவு தடையில்லாமல் இருக்க வேண்டும் என ஆசைப்படாதவர்கள் இருக்க முடியாது. தங்கம், வெள்ளி, செல்வம் போன்றவை மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தான், வீட்டில்
வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும், பண வரவு தடையில்லாமல் இருக்க வேண்டும் என ஆசைப்படாதவர்கள் இருக்க முடியாது. தங்கம், வெள்ளி, செல்வம் போன்றவை மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தான், வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என அதனை சேமித்து வைக்கிறார்கள். ஆனால் ஒரு சிலரிடம் மட்டுமே தங்கம் மற்றும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். சிலர் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அவர்களால் சேமிக்க முடியாது. வீட்டில் தங்கம் குறைவாக உள்ளது. பணம், தங்கம் சேருவதே இல்லை. வர வேண்டிய பணம் கூட வருவதில்லை என கவலைப்படுகிறீர்கள் என்றால் இந்த ஒரே ஒரு ஆன்மீக பரிகாரத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து பாருங்கள். வீட்டில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படுவதை காண முடியும்.
பணம் மற்றும் தங்கம் சேர எளிய பரிகாரம்
தங்கம் வாங்க வேண்டும் அதை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர் யாரும் இல்லை. நம் கையில் தங்கம் இருக்கும் பட்சத்தில் அது ஒரு முதலீடாக இருக்கும். அதை நாம் எப்போதும் வேண்டுமானாலூம் பணமாக மாற்றிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு இந்த தங்கம் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிலர் வீட்டில் நன்றாக சம்பாதிக்கிறோம் ஆனால் எங்கள் வீட்டில் பணமும் சேருவதில்லை நகைகளும் சேருவதில்லை என்று புலம்புவது உண்டு. ஒரு சிலருக்கு என்ன தான் போராடினாலும் தங்கம் வாங்கும் யோகமே இருக்காது. அதே நேரத்தில் வாங்கிய நகையை அணியும் யோகமும் இருக்காது. அந்த நேரத்தில் எனக்கு மட்டும் அதிக கஷ்டத்தை அளிக்கிறார் கடவுள் என்று அவரை திட்டுவது உண்டு. அப்படிப்பட்டவர்கள் சில தாந்திரீக பரிகாரங்களை செய்தாலே போதும் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்து விடலாம். இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்று இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
இந்த பரிகாரம் செய்வதற்கு 3 பச்சை கற்பூரம், 5 ஏலக்காய், 5 துளசி இலை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சாக கட்டி வீட்டில் தங்க நகை வைக்கும் பீரோவில் அல்லது பெட்டியில் வைத்து விடுங்கள். அவற்றுடன் தங்கத்தையோ அல்லது ஒரு நாணயத்தையோ வையுங்கள். இவை மூன்றும் பெருமாளுக்கும், மகாலட்சுமிக்கும் உகந்த பொருட்கள். இவற்றின் நறுமணம் வீட்டில் இருந்தாலே போதும் எந்த இடத்தில் இதன் மணம் இருக்கிறதோ அங்கு உள்ள எதிர்மறை ஆற்றல்களை அழித்து, நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கச் செய்யும். இதனால் சில நாட்களிலேயே படிப் படியாக வீட்டில் தங்கம் சேர துவங்கும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு வெள்ளிக்கிழமை அல்லது மூன்றாம் பிறை நாள் ஏற்ற நாளாகும். இந்த எளிமையான பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். பணப்புழக்கமும் வீட்டில் தங்கு, தடையின்றி இருந்து கொண்டே இருக்கும்.
இதனையும் படியுங்கள் : பண வரவு அதிகரிக்க மகாலட்சுமி தேவியார் பரிகாரம்!