பணம் சேர்ந்து கொண்டே இருக்க வீட்டில் வைக்க வேண்டிய பொருட்கள்!!

எவ்வளவு சம்பாதித்தாலும் பர்ஸில் துளிக்கூட பணம் தங்குவதில்லை என்ற கவலை நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் இன்றைய கால சூழலில் பணம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. பணம் இல்லாமல் எதையுமே செய்ய முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. அப்படியான இந்த பணத்தை தேடி நாம் ஓட வேண்டிய கட

By ·

எவ்வளவு சம்பாதித்தாலும் பர்ஸில் துளிக்கூட பணம் தங்குவதில்லை என்ற கவலை நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் இன்றைய கால சூழலில் பணம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. பணம் இல்லாமல் எதையுமே செய்ய முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. அப்படியான இந்த பணத்தை தேடி நாம் ஓட வேண்டிய கட்டாயத்தில்  இன்று இருக்கிறோம். அதற்காக தான் இத்தனை ஓட்டமும், உழைப்பும். ஆனாலும் அதற்கான பலன் முழுவதுமாக கிடைக்கிறதா என்றால் கொஞ்சம் சந்தேகம் தான். என்ன தான் ஓடி ஓடி சம்பாதித்தாலும் சம்பாதிக்கும் பணம் எல்லாம் வீட்டில் தங்குவது இல்லை. நமக்கு தேவையான பணத்தினை பிறரிடம் எப்படியாவது எடுத்து சொல்லி கடனாக வாங்கி விடலாம். அதுவே கொடுத்த கடனை திருப்பி கேட்கும் போது நம்மால் எந்த விதமான காரணமும் சொல்லி தட்டிக் கழிக்க முடியாது. இப்படியான சூழ்நிலை மாறி பணமானது நம்மை தேடி வரும் சூழ்நிலையை உருவாக்க ஆன்மீகம் பல சூட்சுமங்களை நமக்கு தந்திருக்கிறது. அந்த வகையில் பண ஈர்ப்பு விதிகளின் மூலம் நம்முடைய பணப் பிரச்சினைகளை எப்படி சரிசெய்வது என்பது இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

பணத்தை ஈர்க்கும் பொருட்கள்

வாஸ்து சாஸ்திரப்படி, நம்முடைய வீட்டில் வைக்கக் கூடிய பொருட்களுக்கும், நம்முடைய வீட்டின் செல்வ நிலை, மகிழ்ச்சி ஆகியவற்றிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பொருட்கள் பணத்தையும் நேர்மறை ஆற்றல்களையும் ஈர்க்கும் தன்மை கொண்டவையாகும். அந்த வகையில் செல்வத்தை காந்தம் போல் ஈர்க்கும் எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்தால் குறையாத செல்வத்துடன் வாழலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

பணம் சேர நாம் செய்ய வேண்டியவை 

இந்த வழிபாட்டை செய்வதற்கு ஒரு கிண்ணத்தில் சிறிதளவு மஞ்சள் தூளில் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். சிறிதளவு வெள்ளை துணியை எடுத்து அதை மஞ்சளில் நனைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அந்த துணியில் 3 பச்சை கற்பூரம், 3 ஏலக்காய், 3 கிராம்பு வைத்து ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த மூட்டையை நீங்கள் பணம் புழங்கும் இடமான பீரோ, மணி பர்ஸ் அல்லது தொழில் செய்யும் இடத்தில் வைத்து விடுங்கள். இந்த மூட்டையை நீங்கள் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் விருப்பப்பட்டால் 48 நாட்கள், மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்திற்கு பிறகு இதில் உள்ள பொருட்களை கால் படாத இடத்திலோ அல்லது ஓடும் தண்ணீரிலோ போட்டு விட வேண்டும். பிறகு மீண்டும் புதிதாக மற்றொரு துணியில் பொருட்களை வைத்து, பீரோவில் அல்லது நீங்கள் ஏற்கனவே இந்த மூட்டையை வைத்திருந்த அதே இடத்தில் வைத்து வழிபட்டு வர வேண்டும். 

இந்த வழிபாட்டுக்கு நாம் பயன்படுத்திய அனைத்தும் தாயார் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த ஒரு பொருட்களுள் ஒன்றாக விளங்குகிறது. இவை நறுமணப் பொருட்களில் ஒன்றாகவும் இருக்கிறது. மகாலட்சுமி வசிக்கும் இடங்களில் எல்லாம் இந்த ஒரு வசீகரப் பொருள்கள் இருந்தால், பேரதிர்ஷ்டம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. அதனால் இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து வந்தால் மொத்தமாக கடன் பிரச்சனை, பணப் பிரச்சனை தீரா விட்டாலும், அதன் பாதிப்பு குறைந்து படிப்படியாக அந்த பிரச்சனைகளில் இருந்து மீளுவதற்கு வழி கிடைக்கும். 

இதனையும் படியுங்கள் : கொடுத்த பணம் கிடைக்க தீப வழிபாடு

Recipes AMP · Quick view
View full