மனம் தெளிவு பெற செய்ய வேண்டிய பச்சரிசி பரிகாரம்!!
நாம் எடுக்கக்கூடிய ஒவ்வொரு முடிவுக்கு ஒவ்வொரு விதமான விளைவுகளும் உண்டாகும். நல்லவிதத்தில் முடிவு எடுத்தால் நல்ல விளைவுகள் கிடைக்கும் தவறான முடிவை எடுத்தால் தவறான விளைவுகள் ஏற்படும். இந்த முடிவை எடுப்பதற்கு நமக்கு உறுதுணையாக இருப்பது மனம் தான். பல நேரங்களில் நம்முடைய மனதை ஆட்டி வை
நாம் எடுக்கக்கூடிய ஒவ்வொரு முடிவுக்கு ஒவ்வொரு விதமான விளைவுகளும் உண்டாகும். நல்லவிதத்தில் முடிவு எடுத்தால் நல்ல விளைவுகள் கிடைக்கும் தவறான முடிவை எடுத்தால் தவறான விளைவுகள் ஏற்படும். இந்த முடிவை எடுப்பதற்கு நமக்கு உறுதுணையாக இருப்பது மனம் தான். பல நேரங்களில் நம்முடைய மனதை ஆட்டி வைக்க கூடிய கிரகமாக சந்திர பகவான் திகழ்வார். சந்திர பகவானுக்கே தோஷத்தை நிவர்த்தி செய்த சிவபெருமான் மனம் ரீதியான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடியவர். மனதால் விரும்பியது கிடைக்கவும் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவும் சோமவாரத்தில் வரக்கூடிய பிரதோஷ நாள் அன்று செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
தெளிவான முடிவுகள்
நமக்கு எவ்வளவு தான் இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும் அந்த சூழ்நிலையை சமாளித்து ஒரு தெளிவான முடிவை எடுத்தால் தான் வாழ்க்கை சிறப்பாக அமையும். அந்த நேரத்தில் மனம் தடுமாறி தவறான முடிவை எடுத்து விட்டால் வாழ்க்கையே மாறிவிடும். நம்முடைய வாழ்க்கையில் எடுக்கக்கூடிய பலவிதமான முடிவுகளால் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருப்போம். அந்த கஷ்டங்கள் அனைத்திலும் இருந்து விடுபடுவதற்கு எடுக்கக்கூடிய முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும் அதற்கான பரிகாரத்தைப் பற்றி பார்க்கலாம்.
சந்திர பகவானுக்கு உரிய பரிகாரம்
திங்கட்கிழமை சந்திர பகவானுக்கு உகந்த நாளாக அமையும். திங்கட்கிழமை சந்திர பகவானின் தோஷத்தை நீக்கக்கூடிய சிவபெருமானுக்குரிய பிரதோஷமும் சேர்ந்து வருகிறது. சிவராத்திரி அன்று இந்த பரிகாரத்தை செய்வதால் பல மடங்கு வெற்றி கிடைக்கும். சந்திர பகவானுக்கு உரிய தானியமாக திகழ்வது பச்சரிசி. இந்த பரிகாரத்திற்கு பச்சரிசி மட்டும் இருந்தாலே போதுமானது. இந்த பரிகாரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் வேண்டுமானாலும் செய்யலாம்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
இரவு தூங்குவதற்கு முன்பாக வலது கையில் ஒரு சிறிதளவு பச்சரிசியை எடுத்துக்கொண்டு கைகளை மூடி படுக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு ” ஓம் ஸ்ரீ சந்திர சோமேஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் கூற வேண்டும். பிறகு நீங்கள் எடுத்த தவறான முடிவுகளால் என்னென்ன பிரச்சனைகள் வந்ததோ அந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார சிவபெருமானை வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த பச்சரிசியை ஒரு பேப்பரில் மடித்து தலையணைக்கு கீழ் வைத்துவிட்டு உறங்க வேண்டும். மறுநாள் அந்த பச்சரிசியை எறும்புகளுக்கு பறவைகளுக்கு தானமாக போட வேண்டும். இப்படி செய்வதால் சந்திர பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கும். சிவபெருமானை நம்பி இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : செல்வத்தை பெருக்கக் கூடிய வெள்ளிக்கிழமை பரிகாரம்!!