பணக்கஷ்டம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!!

நம் வாழ்க்கை எப்பொழுது பணகஷ்டம் வரும் என்றும் சொல்லவே முடியாது எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். என்னதான் நாம் உழைத்து சம்பாதித்து பணத்தை சேமித்து வைத்தாலும் செலவை முன்கூட்டியே திட்டமிட்டது போல எதிர்பார்க்காமல் வந்து நிற்கும். அப்படி திடீரென்று பண கஷ்டம் வரும்போது அவசர பணத்தை வைக்

By ·

நம் வாழ்க்கை எப்பொழுது பணகஷ்டம் வரும் என்றும் சொல்லவே முடியாது எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். என்னதான் நாம் உழைத்து சம்பாதித்து பணத்தை சேமித்து வைத்தாலும் செலவை முன்கூட்டியே திட்டமிட்டது போல எதிர்பார்க்காமல் வந்து நிற்கும். அப்படி திடீரென்று பண கஷ்டம் வரும்போது அவசர பணத்தை வைக்காத நாம் நிறைய பரிகாரங்களை செய்து இருந்தாலும் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்து பார்க்கலாம் அதனை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

பணக்கஷ்டம்

திடீரென்று பணக் கஷ்டம் வந்தால் யாரிடம் போய் கேட்பது என்று நினைத்துக் கொண்டே இருப்போம். கடினமான உழைப்பாளியாக இருந்தாலும் கூட திடீரென்று பணக் கஷ்டம் வந்தால் என்ன செய்வது என்றே தெரியாது அடுத்தவர்களிடம் போய் கேட்பதற்கும் நமக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். உடனே அந்த பணம் நமக்கு கிடைக்காது அவசர தேவைகளுக்காக இருந்தாலும் திடீரென்று பணம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள்.

பணக்கஷ்டமும் தைரியமும்

பணக்கஷ்டம் வரும் பொழுது முதலில் முழு நம்பிக்கையோடும் தைரியத்தோடும் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். எப்படி இந்த கடனிலிருந்து மீள போகிறோம் என்று புலம்பாமல் அதற்கான வழியை நிதானமாக அமர்ந்து யோசிக்க வேண்டும். பணம் வருவதற்கான சாத்தியங்கள் என்ன எல்லாம் என்று யோசிக்க வேண்டும் பொறுமையாக சிந்தித்துப் பார்ப்பதோடு இந்த எளிய பரிகாரத்தையும் செய்யலாம்.

பரிகாரம் செய்யும் முறை

பூஜை அறைக்கு சென்று அங்கு ஒரு பித்தளை அல்லது செம்பால் ஆன தட்டை எடுத்து அதில் மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய ஒரு கைப்பிடி நிறைய கல்லுப்பை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதற்கு நடுவில் ஒரு கற்பூரத்தை வைத்து பற்ற வைத்து உங்களுடைய இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்தை நினைத்து மகாலட்சுமி தேவியாருக்கு ஆரத்தி காட்ட வேண்டும். கற்பூரம் முழுவதுமாக எரிந்து முடிந்த பிறகு அந்த உப்பை தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும். மேலும் இந்த மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்

ஓம் யக்க்ஷாய குபேராய வைஸ்ரவணாய
தனதான்யாதிபதயே
தனதான்ய சம்பத் குரு குரு ஸ்வாஹா

இந்த மந்திரத்தை 11 முறை கூறி குபேர பகவானையும் வேண்டி பணத்தைக் கேட்கலாம். உப்பு கரைந்த பிறகு அந்த தண்ணீரை யாருடைய கால் தடமும் படாதவாறு ஊற்றி விட வேண்டும். வியாழக்கிழமை அன்று வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை நல்ல நேரம் பார்த்து செய்ய வேண்டும். இந்த பூஜை செய்து முடித்த பிறகு உங்களுக்கு பணம் கிடைத்தால் அதனை முடிந்த அளவு ஒரு மண் உண்டியலில் காணிக்கையாக செலுத்துவேன் என்று மனதார வேண்டிக்கொண்டு இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக பணம் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : நிரந்தர பண வரவை பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரம்!

Recipes AMP · Quick view
View full