உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீர இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்!!
ஒவ்வொருவரும் தங்களின் வாழ்வில் இருக்கும் பிரச்னைகள், துன்பங்கள் குறித்து பல கஷ்டங்கள் தங்களின் மனதில் வைத்து புலம்புவதுண்டு.வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன்? கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் இருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லிக
ஒவ்வொருவரும் தங்களின் வாழ்வில் இருக்கும் பிரச்னைகள், துன்பங்கள் குறித்து பல கஷ்டங்கள் தங்களின் மனதில் வைத்து புலம்புவதுண்டு.வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன்? கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் இருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் எப்போதுமே வீட்டில் கஷ்டங்கள் வந்துக்கொண்டே இருந்தால் என்ன செய்வது? மன நிம்மதி இருக்காது. உடல் ஆரோக்கியம் சீர்கெடும், எந்த வேலையிலும் நாட்டம் இருக்காது. நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்கி சந்தோஷம் இருக்க வேண்டும். அந்த வகையில் எப்படிப்பட்ட தீர்க்க முடியாத கஷ்டமாக இருந்தாலும் அதை தீர்ப்பதற்கான மிக சிறப்பான பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
கஷ்டங்கள் நீங்க கல் உப்பு பரிகாரம்
உப்பு உணவில் மட்டுமல்ல, நமது ஆன்மிக வாழ்விலும் முக்கியமானது. இந்துக்களின் மிக முக்கியமான மங்கல பொருள் உப்பு. கலைமகள் உதித்த இந்த பாற்கடலில் இருந்து எடுக்கப்படும் உப்பு, கல் உப்பு. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம். உப்பு துர்சக்திகளை, கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல் கொண்டது. இது மகாலட்சுமியின் அம்சம் என்பதால் இதை ஆன்மீகத்தில் பயன்படுத்துவதாக பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உப்பிற்கு இன்னும் மகத்துவம் உள்ளது. அதிலும் கல் உப்பினை ஆன்மிக வழிபாடுகள், பரிகாரங்கள் பலவும் செய்வதற்கு பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. அப்படிப்பட்ட கல் உப்பினைக் கொண்டு முருகப்பெருமானை வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய கஷ்டங்களும் உப்பை போல கரைந்து போய்விடும் என்பது நம்பிக்கை.
பரிகாரம் செய்யும் முறை
இந்த பரிகாரம் செய்வதற்கு அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று, உங்கள் இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து அது நிரம்ப கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு முருகப்பெருமானின் சன்னதியை ஆறு முறை முழுமனதோடு வலம் வர வேண்டும். ஆறு முறை வலம் வந்த பிறகு கோவிலின் ஒரு இடத்தில் உப்பு போடுமிடம் இருக்கும் அங்கு அந்த உப்பை போட்டு விடுங்கள். அதன்பிறகு ஏழாவது முறையாக அடி பிரதட்சணம் செய்ய வேண்டும். அடி பிரதட்சணம் செய்யும் போது வேலுக்குரிய மந்திரத்தை கூறிக்கொண்டு செல்ல வேண்டும். பின் முருகனை தரிசனம் செய்து உங்களுடைய கஷ்டங்களை கூறி அது நீங்க வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து செய்து வந்தால் முருகப் பெருமானின் அருளால் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம் என்பது நம்பிக்கை.
இதனையும் படியுங்கள் : சென்னை திருச்செந்தூர் முருகன் கோவிலின் சிறப்புகள்