வேலை பார்க்கும் இடத்தில் சம்பள உயர்வு ? பதவி உயர்வு வேண்டுமா ? இதை செய்யுங்கள் போதும்!

பலரும் தற்போதைய நாட்களில் சந்தித்து வரும் பிரச்சனை பணப் பிரச்சனைதான் அவர்களுக்கு வரும் வருமானம் குறைவாக இருந்தாலும் அவர்கள் செய்யும் செலவு வருமானத்தை விட அதிகமாக இருக்கிறது. காரணம் நாம் பல நாட்களாக வேலை பார்க்கும் நிறுவனங்களில் நமக்கு பதவி உயர்வு கிடைத்திருக்காது சம்பள உயர்வு கிட

By ·

பலரும் தற்போதைய நாட்களில் சந்தித்து வரும் பிரச்சனை பணப் பிரச்சனைதான் அவர்களுக்கு வரும் வருமானம் குறைவாக இருந்தாலும் அவர்கள் செய்யும் செலவு வருமானத்தை விட அதிகமாக இருக்கிறது. காரணம் நாம் பல நாட்களாக வேலை பார்க்கும் நிறுவனங்களில் நமக்கு பதவி உயர்வு கிடைத்திருக்காது சம்பள உயர்வு கிடைத்திருக்காது. நம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவதற்காக காத்துக் கொண்டிருப்போம். ஆனால் நமக்கோ அனைத்தும் தடையாகவே வந்து கொண்டிருக்கும் இப்படி உங்களின் வேலை பார்க்கும் நிறுவனங்களின் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு எளிய பரிகாரம் செய்தாலே போதும் அதைப்பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணப் போகிறோம்.

குரு பகவான்

வியாழக்கிழமை தினத்தில் உங்கள் வீட்டில் அருகில் உள்ள மாட்டு கொட்டைக்கு சென்று பசு மாட்டிற்கு வாழைப்பழங்கள் வாங்கி கொடுங்கள். அதுபோல வெயில் காலங்களில் உங்கள் வீட்டு வீதிகளில் நடந்து வரும் பசு மாடுகளுக்கு நீங்கள் சாதம் வடித்த வடுதண்ணீர் மற்றும் வீட்டில் இருக்கும் பழைய கஞ்சியை வீணாக்குவதற்கு பதில் அதை சிறிது உப்பு கலந்து கரைத்து பசு மாட்டிற்கு கொடுத்து அதன் தாகத்தை தனித்து விடுங்கள். இது போன்ற நீங்கள் செய்வதால் குரு சந்தோஷம் அடைந்து அவரின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி போவீர்கள்.

சூரிய பகவான்

நமது ஊரில் இருக்கும் குளம் இருக்கும்படியான கோவில்களுக்கு சென்று அந்த குளத்தில் வாழும் மீன்களுக்கு பொரி வாங்கி போடுங்கள் அல்லது நீங்கள் வீட்டிலிருந்து கோவிலுக்கு செல்லும்போது கோதுமை மாவில் சிறிது தண்ணீர் கலந்து சிறு சிறு உருண்டைகளாக தயார் செய்து கொள்ளுங்கள். இந்த கோதுமை மாவு உருண்டைகள் மீன்களுக்கு நீங்கள் உணவாக அளிப்பது மூலமாக சூரிய பகவான் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் இதன் மூலம் நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் நீங்கள் பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு என அனைத்தும் உங்களைத் தேடி வரும்.

சனி பகவான்

இதெல்லாம் செய்தாலும் கூட சனி பகவானின் பார்வையில் இருந்து யாராலும் தப்ப முடியாதல்லவா ஆகையால் சனி பகவானின் பார்வை உங்கள் மீது விழக்கூடாது என்றால் உங்களால் முடிந்த அளவிற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யுங்கள். குறிப்பாக காலில்லாமல் நடக்க முடியாதவர்களுக்கு ஊன்றுகோல் வாங்கி கொடுத்து உதவி செய்யுங்கள். நீங்கள் இதுபோன்று செய்யும்போது சனி பகவான் மனம் குளிர்ந்து உங்கள் மேல் இருக்கும் அவரின் தாக்கம் சற்று குறையும். இப்படி சனி பகவான், குரு பகவான் சூரிய பகவான் என இந்த மூன்று கிரகங்களையும் திருப்தி செய்யும் போது உங்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நீங்கள் முன்னேற ஒரு வழ பிறக்கும் முறை நம்பிக்கையோடு இதை செய்து பாருங்கள் நல்ல பலனை தரும்

Recipes AMP · Quick view
View full