எழரை சனியில் இருந்து பாதுகாப்பாக இருக்க இதை செய்யுங்கள்!

இந்து புராணத்தின் படி சனீஸ்வரர் ஒரு நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். சனி பகவான் நமது ராசிகளுக்கு ஏற்றார் போல் சில துன்பங்களை தருவார் சிலர ராசிக்காரர்களுக்கு சில நேரங்களில் அதிகப்படியான துன்பங்களையும் தருவார் இப்படி சனி பகவானின் பார்வையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள எவ்வளவோ

By ·

இந்து புராணத்தின் படி சனீஸ்வரர் ஒரு நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். சனி பகவான் நமது ராசிகளுக்கு ஏற்றார் போல் சில துன்பங்களை தருவார் சிலர ராசிக்காரர்களுக்கு சில நேரங்களில் அதிகப்படியான துன்பங்களையும் தருவார் இப்படி சனி பகவானின் பார்வையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள எவ்வளவோ பரிகாரங்கள் இருந்தாலும் இன்று நாம் சனி பகவானை சாந்தப்படுத்தி அவரின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

சைனவ சமயம்

காலபைரவருக்கு சனிக்கிழமை நாட்களில் சைனவர்கள் ஒரு வெள்ளை புது துணியில் மிளகாய் முடிச்சு. அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றிய தீபம் ஏற்றலாம்.

வைனவ சமயம்

ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை தினங்களில் வைனவர்கள் நெய் தீபம் ஏற்றி சனி பகவானை மனதில் நினைத்து மனதார வேண்டி கொண்டால் சனி பகவானின் தாக்கம் குறையும்.

பெருமாள்

பெருமாளுக்கு சனிக்கிழமை அன்று விரதம் இருந்து மனதார வேண்டிக் கொண்டால் சனி பகவானின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.

மாற்று திறனாளிகள்

சனி பகவானே திருப்தி படுத்துவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வரலாம். குறிப்பாக பார்வையில்லாதவர்கள், நடக்க இயலாதவர்கள், ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யலாம் மற்றும் காலில்லாதவர்களுக்கு உன்று கோல் தானமாக கொடுப்பது ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கும். இதனால் சனி பகவான் சாந்தப்படுவார்.

பரிகாரம்

குச்சனூர், திருநள்ளாறு மற்றும் சென்னையில் உள்ள பொழிச்சலூர் உள்ள அகத்தீஸ்வரர் திருக்கோவில் போன்ற சனி பகவானின் திருத்தலங்களுக்கு சென்று சனி பகவானுக்கு உரிய பரிகாரங்களை முறையாக செய்து வந்தால் அவரின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும்.

சனி பகவான் வாகனம்

உங்களை பிடித்த ஏழரை சனி முடியும் வரை சனிக்கிழமை தினம் அன்று இரவில் படுக்கும் போது சனிக்கு பிடித்த தானியமான எள்ளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து உங்களின் தலைக்கு கீழ் வைத்து உறங்கி பின் காலை எழுந்தவுடன் புதியதாக வடித்த சாதத்துடன் அந்த எல்லை கலந்து சனி பகவானின் வாகனமான காகத்திற்கு படைத்து வந்தால் சனி சாந்த படுவார்

Recipes AMP · Quick view
View full