இந்த ஒரு விளக்கு சனி பகவானுக்கு ஏற்றினால் போதும். சனிபகவானால் உங்களுக்கு பெரிய கஷ்டங்கள் வரவே வராது!
சனிபகவான் என்ற பெயரை கேட்டாலே பலருக்கும் பயம் தான் வரும். ஆனால் சனிபகவானை போல கொடுப்பவரும் கிடையாது, கெடுப்பவரும் கிடையாது. வாழ்க்கை என்பது என்ன என்பதை புரிய வைக்க தான் ஏழரைச் சனி நம்மை பாடாப்படுத்தும். ஆனால் அது முடிந்த பின்னர் சனிபகவான் கொடுக்கும் இன்பத்தை நாம் அனுபவித்தே தீரலா
சனிபகவான் என்ற பெயரை கேட்டாலே பலருக்கும் பயம் தான் வரும். ஆனால் சனிபகவானை போல கொடுப்பவரும் கிடையாது, கெடுப்பவரும் கிடையாது. வாழ்க்கை என்பது என்ன என்பதை புரிய வைக்க தான் ஏழரைச் சனி நம்மை பாடாப்படுத்தும். ஆனால் அது முடிந்த பின்னர் சனிபகவான் கொடுக்கும் இன்பத்தை நாம் அனுபவித்தே தீரலாம். மனிதனாக பிறந்த அனைவருமே சனியின் பார்வையில் சிக்க தான் வேணும், இதிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது. ஆனால் ஒரு பரிகாரத்தை செய்தால் நமக்கு வரும் பிரச்சனைகளை குறைத்துக் கொள்ளலாம். அது என்ன பரிகாரம் என்பதனை பற்றி இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம்.
சனிபகவானால் வரும் பிரச்சனையின் தாக்கம் குறைய ஏற்ற வேண்டிய விளக்கு
இந்த பரிகாரத்தை கோவிலில் தான் செய்ய வேண்டும், வீட்டில் செய்யக்கூடாது. நவ கிரகம் இருக்கும் கோவிலுக்கு சென்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். சனி பகவானுக்கு மிகவும் பிடித்த உலோகம் இரும்பு என்பது நாம் அனைவரும் அறிந்ததே, எனவே கடைகளில் விற்கும் சிறிய இரும்பு உலோகத்தால் ஆன விளக்கினை வாங்கிக் கொள்ளுங்கள்.
அந்த விளக்கினை கோவிலுக்கு எடுத்துச் சென்று அதில் நல்லெண்ணெய் ஊற்றி கொஞ்சம் தடிமனாக நீளமான திரியை போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு சனி பகவானின் பாதங்களில் சரணடைந்து விடுங்கள். கொடுக்கக்கூடிய கஷ்டங்கள் எதுவும் பெரிய அளவில் துன்பத்தை கொடுக்கக் கூடாது என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
விநாயகர் மற்றும் அனுமன் :
அடிக்கடி கோவிலுக்கு சென்று இரும்பு விளக்கு வாங்கி விளக்கு ஏற்ற முடியவில்லை என்பவர்கள், ஏதேனும் ஒரு சனிக்கிழமைகளில் விளக்கு ஏற்றினாலே போதும். விளக்கு ஏற்றிய பின்னர் இந்த விளக்கை திரும்பவும் வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது. கோவிலில் தான் விட்டு விட வேண்டும். என்னதான் நாம் சனி பகவானுக்கு இந்த பரிகாரத்தை செய்தாலும், சனிக்கிழமைகளில் அனுமன் மற்றும் விநாயகரை வழிபட வேண்டும். அப்பொழுதுதான் சனியின் வக்கிர பார்வையில் இருந்து நாம் தப்பிக்க முடியும்.
உங்களுக்கு எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது அனுமனுக்கு வெற்றிலை மாலையும், விநாயகருக்கு அருகம்புல் மாலையும் உங்கள் கைகளால் கட்டி அவருக்கு அணிவித்து வழிபடுங்கள். இப்படி இரு தெய்வங்களையும் நாம் வழிபட்டாலே போதும் சனியை பார்த்து நாம் பயப்பட வேண்டிய எந்த அவசியமும் இருக்காது. அதேபோல தாலிக்காத தயிர் சாதத்தை நீங்கள் உங்கள் கைகளால் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் கொடுக்க வேண்டும். காலையில் சமைத்த சாப்பாட்டில் எச்சில் படாமல் எடுத்து அதில் தாளிக்காத தயிர் போட்டு காகத்திற்கு உங்கள் கைகளால் வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது.
ஊனமுற்றோருக்கு தானம் அளியுங்கள்
கால் ஊனமாக இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த சிறு உதவிகளை செய்தால் மிகவும் நல்ல பலனை கொடுக்கும். உங்களால் வாங்கித் தர முடியும் என்றால் வீல் சேர் ஒன்றனை கால் ஊனமானவர்களுக்கு வாங்கிக் கொடுங்கள் அல்லது அவர்கள் பயன்படுத்தும் காலனி ஒன்றினை அவர்களுக்கு வாங்கி கொடுங்கள். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏழரை சனி உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் மிகவும் விசேஷமாக இருக்கும் மற்றும் நல்ல பலனையும் அடையலாம்.