Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் சுவையில் சப்போட்டா பழ கேசரி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

Advertisement

உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஓர் இனிப்பு பலகாரத்தை செய்து கொடுங்கள். அதிலும் உங்களுக்கு கேசரி பிடிக்குமானால் சப்போட்டா மற்றும் ரவையைக் கொண்டு செய்யப்படும் கேசரி செய்து கொடுங்கள். கேசரி தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய ஒரு இனிப்பு வகை. பண்டிகையோ, பிறந்த நாட்களோ, அல்லது விசேஷ நாட்களோ நாம் முதலில் செய்யும் ஒரு இனிப்பு வகை கேசரி தான். கல்யாண விருந்துகளிலும் கட்டாயம் இடம் பிடித்திருக்கும் ஒரு இனிப்பு வகை இவை. எல்லோரும் எளிதாக சீக்கிரம் செய்யக்கூடிய ஸ்வீட் என்றால் அது கேசரி தான். வெறும் 3 அல்லது 4 பொருட்களை கொண்டே வெகு சுலபமாக இதை செய்து விடலாம். அதனாலேயே உண்பவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் மத்தியிலும் இவை பிரபலம்.

அதுமட்டுமல்ல, வீட்டுக்கு திடீரென விருந்தினர் வந்துவிட்டால் வீட்டில் ரவை, சர்க்கரை, முந்திரி, சிறிது நெய் இருந்துவிட்டால் போதும் சீக்கிரமாக கேசரி செய்துவிடலாம். என்ன தான் இவை செய்வதற்கு எளிமையாக இருந்தாலும் சில நேரங்களில் சரியான பக்குவத்தில் இவை பலருக்கும் வருவதில்லை. சிறிது பக்குவம் மாறினாலும் இவை குழைந்து விடும் அல்லது கட்டியாகி விடும். ஆனால் இந்த எளிமையான செய்முறை விளக்கத்தை பின்பற்றி செய்தால் சுவையான மற்றும் இனிப்பான சப்போட்டா ரவா கேசரியை சுலபமாக செய்து விடலாம். ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு மற்றும் நெய் போன்றவற்றை சேர்ப்பதால் கமகம என்று மணமாக இருக்கக் கூடிய இந்த சப்போட்டா ரவை கேசரியை எப்படி செய்யலாம் என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Advertisement

சப்போட்டா பழ கேசரி | Sapota Fruit Kesari Recipe In Tamil

Print Recipe
உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஓர் இனிப்பு பலகாரத்தை செய்து கொடுங்கள். அதிலும் உங்களுக்கு கேசரி பிடிக்குமானால் சப்போட்டா மற்றும் ரவையைக் கொண்டு செய்யப்படும் கேசரி செய்து கொடுங்கள். கேசரி தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய ஒரு இனிப்பு வகை. பண்டிகையோ, பிறந்த நாட்களோ, அல்லது
Advertisement
விசேஷ நாட்களோ நாம் முதலில் செய்யும் ஒரு இனிப்பு வகை கேசரி தான். கல்யாண விருந்துகளிலும் கட்டாயம் இடம் பிடித்திருக்கும் ஒரு இனிப்பு வகை இவை. எல்லோரும் எளிதாக சீக்கிரம் செய்யக்கூடிய ஸ்வீட் என்றால் அது கேசரி தான். ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு மற்றும் நெய் போன்றவற்றை சேர்ப்பதால் கமகம என்று மணமாக இருக்க கூடிய இந்த சப்போட்டா ரவை கேசரியை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Course sweets
Cuisine Indian
Keyword Sapota Fruit Kesari
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 78

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 8 சப்போட்டா
  • 1/2 கப் சர்க்கரை
  • 1/2 கப் ரவை
  • 1/4 கப் பால்
  • 1/4 கப் நெய்
  • 1/4 கப் நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி

Instructions

  • முதலில் சப்போட்டாவை தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் நறுக்கி வைத்துள்ள பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் அதே கடாயில் ரவையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதே கடாயில் பால் சேர்த்து கொதிக்க விடவும். பால் கொதித்ததும் சர்க்கரை மற்றும் ரவை சேர்த்து நன்கு கலந்து விடவும்.‌
  • பின் அரைத்து வைத்துள்ள சப்போட்டா விழுது சேர்த்து நன்கு கலந்து மீண்டும் கொஞ்சமாக பால் சேர்த்து கலந்து விடவும்.
  • பின் நெய் சேர்த்து கலந்து பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் மூடி வைக்கவும்.
  • பின் வறுத்து வைத்துள்ள நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சப்போட்டா பழ கேசரி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 78kcal | Carbohydrates: 1.9g | Protein: 4.4g | Fat: 1.1g | Sodium: 12mg | Potassium: 193mg | Fiber: 4.5g | Sugar: 2.6g | Vitamin A: 60IU | Vitamin C: 15mg | Calcium: 21mg | Iron: 8mg

இதனையும் படியுங்கள் : வெயிலுக்கு இதமா சுவையான சப்போட்டா பழம் மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

மட்டன் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சோறு சாப்பிடுவாங்க!

மட்டன் எடுத்தா என்ன மட்டன் குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு…

3 மணி நேரங்கள் ago

ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்

நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது…

3 மணி நேரங்கள் ago

வெறும் மூணு பொருள் மட்டும் வச்சி சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!

பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான்…

3 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

13 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

1 நாள் ago