நினைத்தது நடப்பதற்கு முருக பெருமான் சஷ்டி வழிபாடு!!

ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு விதமான தெய்வங்களுக்கு உகந்த ரீதியாக கருதப்படுகிறது. அந்த திதி அன்று அந்த தெய்வத்தை நாம் வழிபாடு செய்யும் போது அந்த தெய்வத்துடைய அருளை நம்மால் முழுமையாக பெற முடியும். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தை நன்றாக செய்து எளிதில் வெற்றி பெற முருகப்பெரு

By ·

ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு விதமான தெய்வங்களுக்கு உகந்த ரீதியாக கருதப்படுகிறது. அந்த திதி அன்று அந்த தெய்வத்தை நாம் வழிபாடு செய்யும் போது அந்த தெய்வத்துடைய அருளை நம்மால் முழுமையாக பெற முடியும். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தை நன்றாக செய்து எளிதில் வெற்றி பெற முருகப்பெருமானை முருகப்பெருமானுக்கு உரிய சஷ்டி திதி என்று வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் வளர்பிறை சஷ்டி அன்று ஏலக்காயை வைத்து செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி பார்க்கலாம்.

நினைத்த வேண்டுதல்கள்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல்கள் இருக்கும். ஒவ்வொரு விதமான ஆசைகளும் நடக்க வேண்டும் என்று நிறைய ஆசைகள் இருக்கும். அது எப்பேர்ப்பட்ட ஆசையாக இருந்தாலும் அதனை முருகப்பெருமானிடம் நான் கேட்கும் பொழுது சீக்கிரத்திலேயே நிறைவேற்றி தருவார். அப்படி முருகப்பெருமான் நாம் நினைத்ததை நிறைவேற்றுவதற்கு அவருக்கு உரிய தினமான சஷ்டி திதி அன்று வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது சில சூட்சமமான பொருட்களையும் நாம் பயன்படுத்த வேண்டும்.

வளர்பிறை சஷ்டி

வளர்பிறை சஷ்டி நாள் அன்று ராகுகால எமகண்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் வீட்டில் முருகப்பெருமானுடைய வேல் திருவுருவப்படம் சிலை போன்றவற்றை சுத்தம் செய்து சந்தன குங்குமம் பொட்டு வைத்து செவ்வரளி மலர்கள் அல்லது செம்பருத்தி பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். இந்த பூக்கள் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை கிடைக்கின்ற பொருட்களை வைத்து அலங்காரம் செய்து கொள்ளலாம். வளர்பிறை சஷ்டி என்று இதனை செய்ய வேண்டும் அதுவும் முருக பெருமானுக்கு உரிய ஹோரை நேரத்தில் செய்வது நல்லது.

ஏலக்காய் மாலை

21 ஏலக்காய் களை எடுத்து அதனை நூல் கொண்டு மாலையாக கட்ட வேண்டும். அதனை முருகப்பெருமானுடைய திருவுருவப்படம் அல்லது சிலைக்கு போடலாம். முருகப்பெருமானுடைய வேலுக்கும் கூட போடலாம். பிறகு மூன்று நெய் தீபங்களை ஏற்றி வைத்து தேனை நெய்வேதியமாக வைத்து ஓம் சரவணபவ போற்றி ஓம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

ஏலக்காயை பயன்படுத்தும் முறை

முருகப்பெருமான் முன்பு அமர்ந்து உங்களுடைய வேண்டுதல்களை முன்வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். மறுநாள் காலையில் முருகப்பெருமானுக்கு சாற்றிய ஏலக்காய் மாலையை எடுத்து சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அனைத்தையும் பொடியாக்கி வீட்டில் சாம்பிராணி தூபம் போடும்போது அதனை தூபத்தில் போட்டு பயன்படுத்திக் கொள்ளலாம். எளிமையான இந்த ஏலக்காய் வழிபாட்டை வளர்பிறை சஷ்டி நாளன்று முருகப்பெருமானை மனதார நினைத்து செய்தால் நிச்சயம் முருகப்பெருமான் நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றி தருவார்.

இதனையும் படியுங்கள் : கடன் தீர்க்கும் திருச்செந்தூர் முருகன்

Recipes AMP · Quick view
View full