2025ல் ஒரு சில ராசிகளுக்கான சனி பெயர்ச்சி பரிகாரம்!!
திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி மாஸ் 29ஆம் தேதி சனிக்கிழமை நடந்து முடிந்தது. சில ராசிகளுக்கு இதனால் சாதகமான பலன்கள் இருந்தாலும் சிலர் ராசிகளுக்கு சோதனையான காலகட்டமாகவும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆறு ராசிக்காரர்களுக்கு 2 1/2 ஆண்டுகளுக்கு மிகவு
திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி மாஸ் 29ஆம் தேதி சனிக்கிழமை நடந்து முடிந்தது. சில ராசிகளுக்கு இதனால் சாதகமான பலன்கள் இருந்தாலும் சிலர் ராசிகளுக்கு சோதனையான காலகட்டமாகவும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆறு ராசிக்காரர்களுக்கு 2 1/2 ஆண்டுகளுக்கு மிகவும் சோதனையான காலமாக இருக்கப் போகிறது. அதற்காக பயப்படாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் சனிபகவான் சோதித்தாலும் கை விடமாட்டார். அவரை வழிபாடு செய்பவர்களுக்கு நேர்வழியில் நியாயமாக நடப்பவர்களுக்கு நிச்சயம் அவர் நன்மையை தான் செய்வார். கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகளை பற்றியும் அவர்கள் என்னென்ன செய்தால் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் என்பதை பற்றியும் எந்த இறைவனை வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் துவங்கி உள்ளது. இதனால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படாவிட்டாலும் ஒரு சில விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் திட்டமிட்டு செய்ய வேண்டும் அவசர முடிவுகளை எடுக்கக் கூடாது. அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு தினமும் முருகனை வழிபட்டு வந்தால் உங்களுக்கு மிகவும் நல்லது. முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை, சஷ்டி செவ்வாய்க்கிழமை தைப்பூசம் பங்குனி உத்திரம் என அனைத்து நாட்களிலும் முருக பெருமானை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை திருவெண்காடு புதன் ஸ்தலத்திற்கு சென்று வழிபாடு செய்து வாருங்கள்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்க போகிறது வார்த்தையில் கவனம் தேவை. எதை பேசினாலும் யோசித்துப் பேச வேண்டும். வெளிநாட்டில் இருப்பவர்கள் விதியை மீறாமல் அந்த நாட்டு விதியை கடைப்பிடித்து நடக்க வேண்டும் நேர்மையாக இருக்க வேண்டும். குறுக்கு வழியில் செல்லாமல் நியாயமாக இருந்தால் தேவையில்லாத பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். சித்தர் வழிபாடு செய்வது மகான் வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். சாய்பாபா வள்ளலார் காஞ்சி மகா பெரியவா போன்ற சித்தர்களை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. பொங்கு சனி பகவான் திருக்கொள்ளிக்காடு தளத்திற்கு ஒருமுறை சென்று வந்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு கண்டக சனிக்காலம் தொடங்கியுள்ளது. எதிரிகளால் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள் யாரை முடியும் எதற்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். எந்த விஷயத்திலும் தேவையில்லாமல் கையெழுத்து இட வேண்டாம். சில நன்மைகள் உங்களுக்கு கிடைத்தாலும் அதே சமயத்தில் கூடுதலாக கவனமாக இருக்க வேண்டும். ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் நல்லது. வாய்ப்பு கிடைக்கும் போது திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவிலுக்கு சென்று ராகு பகவானே வழிபாடு செய்து வருவது நன்மையை கொடுக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி காலம் தொடங்கியுள்ளது. உடல் நிலத்தில் கவனம் அதிகமாக தேவை அடுத்தவர்களுடைய பிரச்சனையில் தலையிடக்கூடாது. மூன்றாவது நபரை பற்றி தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும் உங்களுடைய பிரச்சனைகளை வெளியில் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். சில பல நன்மைகளை உங்களுக்கு சனி பகவான் கொடுப்பார் தினமும் நரசிம்மரை வழிபட்டு வாருங்கள். கஞ்சனூர் சுக்கிரன் ஸ்தலத்திற்கு ஒருமுறை சென்று வந்தால் நல்லது.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்களுக்கு பாத சனி நடக்கும் காலம். எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக இருக்க வேண்டும் அவசரப்படக்கூடாது. உடல் உபாதைகளை உடனடியாக கவனிக்க வேண்டும் மருத்துவர் உடைய ஆலோசனையில் வியாதிகளுக்கு தீர்வு காணுங்கள் நீங்களாகவே எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். சோம்பேறித்தனம் இல்லாமல் அனைத்து விஷயங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் பைரவர் சிவபெருமான் போன்ற தெய்வங்களை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. துன்பத்திலிருந்து தப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் போது திங்களூரில் உள்ள சந்திர பகவானுக்குரிய ஸ்தலத்திற்கு சென்று வருவது நல்லது.
மீன ராசி
மீன ராசி காரர்களுக்கு ஜென்ம சனி தொடங்கியுள்ளது சனிபகவான் உங்களுக்கு பல தொந்தரவுகளை கொடுப்பார் ஆனாலும் கூட சில நன்மைகளையும் கொடுப்பார். அனைத்து விஷயங்களிலும் பொறுமையாக இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும். நீண்டதூர பயணத்தின் போது வண்டி வாகனம் ஓடும் போது உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை அடுத்தவர்களுடைய பேச்சுக்கு மரியாதை கொடுத்து நடக்க வேண்டும். தினம் தினம் விநாயகரை வழிபட்டு வந்தால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். கேது பகவானுக்கு உரிய ஸ்தலமான கீழ்பெரும் பள்ளம் ஒருமுறை சென்று வருவது நல்லது.
இதனையும் படியுங்கள் : 2025 குரு பெயர்ச்சி வெற்றி பெறும் ராசிகள்