செல்வ தடையை நீக்கக்கூடிய கருட வழிபாடு!!
கருடர் பெருமாளுடைய வாகனமாக திகழக்கூடியவர். அவரை பெரிய திருவடி என்று வைணவர்கள் கூறுவார்கள். பெருமாளை வழிபடுவதற்கு முன்பாக கருடவை வழிபாடு செய்தால் பெருமாளின் அருளை நம்மால் பெற முடியும். வருட அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தவர் மேலும் பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் செல்வ வளத்திற்கு
கருடர் பெருமாளுடைய வாகனமாக திகழக்கூடியவர். அவரை பெரிய திருவடி என்று வைணவர்கள் கூறுவார்கள். பெருமாளை வழிபடுவதற்கு முன்பாக கருடவை வழிபாடு செய்தால் பெருமாளின் அருளை நம்மால் பெற முடியும். வருட அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தவர் மேலும் பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் செல்வ வளத்திற்கு எந்த வித குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார். அப்படிப்பட்ட கருடாழ்வாருக்கு உரிய அற்புதமான நாள் தான் கருட பஞ்சமி. எந்த முறையில் வழிபாடு செய்தால் செல்வம் சேரும் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
கருட பஞ்சமி
ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம் இந்த மாதத்தில் வரக்கூடிய அனைத்து நாட்களுக்குமே ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அதில் மிகவும் சிறப்பு மிகுந்த பல தெய்வங்களுக்கு இந்த ஆடி மாதத்தில் உரிய நாட்கள் என்று பல உண்டு அந்த வகையில் கருடருக்குரிய நாளாக திகழக்கூடிய கருட பஞ்சமி இந்த மாதத்தில் தான் வரும். மற்ற நாட்களில் கருடரை வழிபாடு செய்தாலும் இல்லை என்றாலும் கருட பஞ்சமி அன்று நிச்சயமாக வழிபாடு செய்ய வேண்டும். ஜூலை மாதம் 29ஆம் தேதி கருட பஞ்சமி வருகிறது.
கருட பஞ்சமி வழிபாடு
கருட பஞ்சமி அன்று காலை நேரத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும். கருடருக்கும் பெருமாளுக்கும் சேர்த்து துளசி மாலை வாங்க வேண்டும். அதேபோல் கருடருக்கு இனிப்பு பொருளையும் வாங்கி செல்ல வேண்டும். கொடி மரத்தை வணங்கி விட்டு கருடாழ்வாருக்கு துளசி மாலை சாற்றி அவருக்கு முன்பாக இனிப்பு பொருளை வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
பெருமாள் வழிபாடு
கருடரை வணங்கி விட்டு பிறகு பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். பிறகு கோவிலை வலம் வர வேண்டும். கொடிமரம் பக்கத்தில் அமர்ந்து கொண்டு “ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்த பிறகு “ஓம் கருடா நமோ நம” என்ற மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு கருடனின் மூலமந்திரத்தை 51 முறை உச்சரிக்க வேண்டும் பிறகு துளசி இலைகளை பிரசாதமாக சாப்பிட வேண்டும். இப்படி வழிபாடு செய்வதால் கருடனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய நாட்கள் என்று அந்த தெய்வத்தை வழிபாடு செய்தால் மற்ற நாட்களில் செய்த பலனைவிட பல மடங்கு பலன் கிடைக்கும். கருட பஞ்சமி அன்று கருடரை வழிபாடு செய்வது செல்வங்களை பெற்றுத்தரும்.
இதனையும் படியுங்கள் : செல்வம் அதிகரிக்க சமயலறையில் செய்ய வேண்டியவை