சேனைக்கிழங்கு தோரன் கூட்டு இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! சுட சுட சோறுடன் சாப்பிட ஏற்றது!
கிழங்குகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். அதில் பெரும்பாலானோருக்கு உருளைக்கிழங்கு தான் பிடிக்கும். அதேப் போல் சேனைக்கிழங்கிழங்கின் சுவைக்கும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சேனைக்கிழங்கை பொரியல் செய்து சாப்பிட்டால், அதன் சுவையே அலாதியானது. ஒரு மாறுதலுக்கு சேனை தோரன் செய்து பாருங்கள்
கிழங்குகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். அதில் பெரும்பாலானோருக்கு உருளைக்கிழங்கு தான் பிடிக்கும். அதேப் போல் சேனைக்கிழங்கிழங்கின் சுவைக்கும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சேனைக்கிழங்கை பொரியல் செய்து சாப்பிட்டால், அதன் சுவையே அலாதியானது. ஒரு மாறுதலுக்கு சேனை தோரன் செய்து பாருங்கள். தோரன் தேங்காய் மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்த்து வதக்கி, வேகவைத்த அரிசியுடன் ஒரு பக்கமாக பரிமாறப்படுகிறது!
இதனையும் படியுங்கள் : பஞ்சாபி சேனைக்கிழங்கு மசாலா இப்படி செய்து பாருங்க! சப்பாத்தியுடன் சாப்பிட இதன் ருசியே தனி!!
தோரன் கேரளாவில் உள்ள ஒவ்வொரு சமையலறையிலும் பிரதானமாக உள்ளது. நீங்கள் தோரனை காய்கறிகளுடனும், மீன் அல்லது கோழியுடனும் செய்யலாம். இதை செய்வது மிகவும் எளிமையானது, ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். சாதம் மற்றும் சாம்பார், ரசம் அல்லது தயிர் போன்ற கிரேவியுடன் பரிமாறும்போது இது மிகவும் சுவையாக இருக்கும்.