500 நாட்களுக்கு பிறகு பலமிழக்கும் செவ்வாய்யால் நன்மை பெற போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றுவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய்

By ·

வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றுவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் வரை இருப்பார். தற்போது மிதுன ராசியில் சஞ்சரித்து வரக்கூடிய செவ்வாய் பகவான் தற்போது அக்டோபர் 20 ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இங்கு நீச நிலையை அடைய உள்ள செவ்வாய் எந்தெந்த ராசிக்கெல்லாம் அற்புத பலனைத் தருவார் என தெரிந்து கொள்வோம்.

மிதுனம்

கடக ராசியில் செவ்வாயின் சஞ்சாரத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு பல விதத்தில் நன்மைகள் கிடைக்கும். உங்களின் பழைய கடன்கள் தீரும். இழந்த பணத்தை மீட்பதற்கான நல்ல வாய்ப்புகள் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பேச்சால் பல காரியங்களை முடிப்பீர்கள்.

கடகம்

செவ்வாய் பகவான் கடக ராசியிலேயே அடுத்த 45 நாட்கள் சஞ்சரிக்க உள்ளார். இந்த காலகட்டத்தில் சந்திரனும், செவ்வாயும் இணைவதால் பல விதத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். செல்வ வளம் கூடும். உங்களின் முடிவெடுக்கும் திறன் மேம்படும். இதன் விளைவாக வாழ்வில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவார்கள். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். பண வரவு அதிகரிக்கும்.

துலாம்

துலா ராசியில் உள்ளவர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி பல விதத்தில் நன்மை பயக்கும். வேலை செய்யும் இடத்தில் நற்பெயரும், செல்வ செழிப்பும் அதிகரிக்கும். வணிகர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் தங்களின் முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்.

இதனையும் படியுங்கள் : ஐப்பசி மாதத்தில் ஜாக்பாட் அடித்து பணம் கொட்ட போகும் 5 ராசிக்காரர்கள் இவர்கள் தான்! இதில் உங்கள் ராசியும் உள்ளதா?

Recipes AMP · Quick view
View full