உப்பு மற்றும் அதனுடைய சாஸ்திரங்கள்!!
உப்பு என்பது சமையலுக்கும் சரி ஆன்மீகத்திலும் சரி மிகவும் முக்கியமான ஒன்று. வீட்டிற்கு உப்பு வாங்குவது குறித்து பலவிதமான பாரம்பரியமான நன்மைகள் இருக்கிறது. இவை அனைத்து லக்ஷ்மி கடாட்சம் மற்றும் செல்வத்துடன் தொடர்புடையது. உப்பு வாங்க வேண்டிய நாள் வாங்கக்கூடாத நாள் யார் யாரெல்லாம் உப்
உப்பு என்பது சமையலுக்கும் சரி ஆன்மீகத்திலும் சரி மிகவும் முக்கியமான ஒன்று. வீட்டிற்கு உப்பு வாங்குவது குறித்து பலவிதமான பாரம்பரியமான நன்மைகள் இருக்கிறது. இவை அனைத்து லக்ஷ்மி கடாட்சம் மற்றும் செல்வத்துடன் தொடர்புடையது. உப்பு வாங்க வேண்டிய நாள் வாங்கக்கூடாத நாள் யார் யாரெல்லாம் உப்பு வாங்கலாம் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
உப்பு வாங்க வேண்டிய நாள்
உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் என்பதால் உப்பை முதலில் யாருக்கும் கடனாக கொடுக்கக்கூடாது. நாம் பிறரிடம் இருந்து கடனாகவும் வாங்கக்கூடாது. வெள்ளிக்கிழமையன்று உப்பு வாங்குவது வீட்டில் லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்க செய்யும். மேலும் அட்சய திருதியை சுக்கிர ஹோரை போன்ற நேரங்களில் வீட்டிற்கு உப்பு வாங்குவது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை நீக்கி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். மேலும் இது வீட்டிற்கு செல்வ செழிப்பையும் கொண்டு வரும். வீட்டை சுத்தம் செய்யும் போது உப்பு நீரை பயன்படுத்துவது எதிர்மறை சக்திகளை நீக்கும் ஆனால் வியாழக்கிழமை அன்று மட்டும் உப்பு நீரை பயன்படுத்தி துடைக்க கூடாது. சம்பளம் வாங்கியவுடன் முதல் நாள் சம்பளம் யார் வாங்கினார்களோ அவர்களுடைய கையால் உப்பு வாங்கி வருவது மிகவும் சிறப்பானது.
உப்பு வாங்க கூடாத நாட்கள்
சனிக்கிழமை அன்று உப்பு வாங்குவது தொழில் லாபத்தை ஏற்படுத்தாது. நஷ்டத்தை தான் கொடுக்கும். சனிபகவானுடன் தொடர்புடைய சில பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்க கூடாது அதில் உப்பும் ஒன்று. திருமணமான பெண்கள் பிறந்த வீட்டிலிருந்து உப்பை எடுத்து செல்லக்கூடாது அது தாய் வீட்டில் வறுமையை கொடுக்கும். ஒரு வீட்டில் பிறந்த மகள் மகாலட்சுமிக்கு சமம் என்பதால் உப்பை எடுத்துச் செல்வது மகாலட்சுமியை வீட்டில் விட்டு வெளியேறுவது போல் அர்த்தம். உப்பை ஒரு கையில் இருந்து மற்றொரு கைக்கு நேரடியாக மாற்றக்கூடாது அதனை கீழே வைக்க வேண்டும் தேவைப்படுபவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
உப்பு வாங்க கூடாத சில நபர்கள்
வீட்டிற்கு விருந்தாளியாக வரும் போது அவர்கள் உப்பு வாங்கி வரக்கூடாது. மாதவிடாய் சமீபத்தில் பெண்கள் அவர்களுடைய கைகளால் உப்பை வீட்டிற்கு வாங்கி வரக்கூடாது. நகையை அடமானம் வைத்து முடித்து வீடு திரும்பும் போது உப்பு வாங்கி வரக்கூடாது. கடன் வாங்கி கொண்டு வீடு திரும்பும் போதும் உப்பு வாங்க உப்பு மகாலட்சுமியின் அம்சம் என்பதால் அதனை வீணாக்கக்கூடாது. உப்பு தெய்வீக அம்சம் பொருந்தியது என்பதால் அடிக்கடி தூளாக்கி பயன்படுத்தக் கூடாது அப்படியே கல் உப்பாக தான் பயன்படுத்த வேண்டும்.
இதனையும் படியுங்கள் : கடன் தீர்க்கும் கல் உப்பு பரிகாரம்