கடன் கஷ்டம், பண கஷ்டமும் வராமல் இருக்க ஆண்கள் குளித்ததும் இதை மட்டும் செய்யுங்கள்!
கடன் சுமை என்பது பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக இருக்கும். இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் ஆண்கள்தான். குடும்பத்தை எவ்வாறு ஓட்டப் போகிறோம் என்ற பயம் அவர்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கும். அதற்காக கடன் வாங்குவார்கள் ஆனால் அதனை கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பார்கள். ஆகவே,
கடன் சுமை என்பது பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக இருக்கும். இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் ஆண்கள்தான். குடும்பத்தை எவ்வாறு ஓட்டப் போகிறோம் என்ற பயம் அவர்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கும். அதற்காக கடன் வாங்குவார்கள் ஆனால் அதனை கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பார்கள். ஆகவே, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஆண்கள், வருமானம் இல்லாமல் பணக்கஷ்டத்தில் சிக்கி தவிக்கும் ஆண்கள், குடும்பத்தை நடத்த வழி இல்லாமல் வருமானம் இல்லாமல இப்படி எல்லோருமே இந்த பரிகாரத்தை செய்யும் போது, அவர்களுக்கு நல்ல ஒரு மாற்றம் வாழ்வில் வரும்.
கடன் தீர ஆண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்
பொதுவாக தண்ணீருக்கு நல்ல சக்தி ஒன்று உள்ளது. ஏனென்றால் அதில் தான் கங்காதேவி குடியிருக்கிறாள். நாம் ஏதாவது தவறு செய்யும் பொழுது அல்லது தோஷம் ஏற்படும் பொழுது இந்த தண்ணீரை தலையில் தெளித்தால் நமக்கு தோஷ நிவர்த்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல் குருக்களோ அல்லது குருமார்களோ தியானம் செய்யும் பொழுது நீர்நிலை அல்லது அருவிகள் ஓடும் இடத்தில் அமர்ந்து தான் தியானம் செய்வார்கள். இதிலிருந்து நீருக்கு சக்திகள் உள்ளது என்பதை நம்மால் அறிய முடிகிறது.
இந்த பரிகாரத்தை நாம் நீரை வைத்து தான் செய்யப் போகிறோம். ஆனால் குளித்து முடித்தவுடன் துண்டை கட்டிக் கொள்ளுங்கள், உடம்பை துடைக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் துடைக்காமல் துண்டை கட்டிக் கொண்டால் அந்த துண்டானது ஈரம் ஆகிவிடும். அப்படியே, அந்த ஈரத்துடன் கிழக்கு நோக்கி நின்று எனக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் எல்லாம் தீர வேண்டும் என்று கடவுளை நினைத்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் இதை நீங்கள் தினமும் செய்து வர வேண்டும். ஒரே ஒரு பண பிரச்சனையை சொல்லி வேண்டுதல் வைக்க வேண்டும். அந்த பிரச்சனை சரியாகிவிட்ட பின்பு அடுத்த கடன் பிரச்சனையை சொல்லலாம்.
குலதெய்வம் அல்லது சூரிய பகவான்
ஈர உடலுடன் கிழக்கு நோக்கி நீங்கள் செய்யும் இந்த வேண்டுதலுக்கு பிரபஞ்சம் உங்களுக்கு பதில் கொடுக்கும். எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் மனதில் நினைத்து நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்கள் குலதெய்வம் அல்லது சூரிய பகவான் அல்லது உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு நீங்கள் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுக்கு இருக்கும் பணம் பிரச்சனையை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும் என்பது நம்பிக்கை.
இந்த பரிகாரத்தை விடாமல் தொடர்ந்து தினமும் செய்து வாருங்கள். மேலே சொன்னபடி இதை ஆண்களால் மட்டும் தான் செய்ய முடியும். ஆண்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள். ஒரு வேலை உங்களுடைய மனைவிக்கோ, உங்களுடைய அம்மாவுக்கோ இப்படி ஒரு கடன் பிரச்சினை இருந்தால் அவர்களுக்காக நீங்கள் இந்த வேண்டுதலை பிரபஞ்சத்திடம் வைக்கலாம். அதுவும் நிச்சயம் பலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.